CWC 2023 | ‘தீவிரமான காயம் அடுத்த 3 போட்டிகளில் ஹர்திக் விளையாடுவது சந்தேகம்!’
உலககோப்பை லீக் போட்டிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், காயம் காரணமாக ஹர்திக் பாண்டியா அடுத்த 3 போட்டிகளில் விளையாடுவது சந்தேகம் ஆகி இருக்கிறது.
உலககோப்பை லீக் போட்டிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், இந்தியாவிற்கான அடுத்த 3 லீக் போட்டிகளிலும் ஹர்திக் பாண்டியா பங்கேற்பது சந்தேகமாகி இருக்கிறது. வங்கதேசத்திற்கு எதிரான லீக் போட்டியில் அவருக்கு தீவிரமான காயம் ஏற்பட்டதை அடுத்து அவருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு இருப்பதாக தேர்வாளர்கள் கருத்து தெரிவித்து இருக்கின்றனர்.
“ மருத்துவர்கள் அறிவுறுத்துதலின் படி அவர் ரெஸ்டில் இருப்பதாக கூறப்படுகிறது. மூன்று போட்டிக்கு பின்னரும் அவர் உடல் தகுதி பெறவில்லையெனில் முழு உலககோப்பை தொடரையும் அவர் மிஸ் செய்ய வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது “