CWC 2023 | Match No 26 | PAK V SA | ‘தென் ஆப்பிரிக்காவின் அதிரடியான வெற்றிகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திடுமா பாகிஸ்தான்?’

CWC 2023 Match No 26 SA VS PAK Who Will Win Today Idamporul

CWC 2023 Match No 26 SA VS PAK Who Will Win Today Idamporul

உலககோப்பையின் இன்றைய லீக் போட்டியில் பாகிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது தென் ஆப்பிரிக்க அணி.

தொடர்ந்து அனைத்து போட்டிகளிலும் அதிரடியை மையமாக வைத்து விளையாடி வரும் தென் ஆப்பிரிக்க அணி, இன்னொரு பக்கம் பாகிஸ்தானின் ராக்கெட் வேக பாஸ்ட் பவுலிங் யூனிட் என்று சம பலத்துடன் இரு அணிகளும் களம் இறங்கினாலும் கூட, தென் ஆப்பிரிக்க அணி நிலையான ஒரு அணியை வைத்து இருப்பதால் இன்று தென் ஆப்பிரிக்காவின் வசமே வெற்றி சரிய வாய்ப்பு இருக்கிறது.

பாகிஸ்தான் அணியை பொறுத்தமட்டில் முழுக்க முழுக்க பாஸ்ட் பவுலிங் யூனிட்டையும், பாபர் ஆசம், ரிஸ்வான் உள்ளிட்ட இரண்டு பேட்ஸ்மேன்களையும் மட்டுமே முழுக்க முழுக்க சார்ந்து இருக்கிறது. ஒரு ஸ்ட்ராங்கான ஸ்பின்னர் இல்லை. ஒரு அதிரடியான மிடில் ஆர்டர் இல்லை என்னும் போது அணியாக ஒட்டு மொத்தமாக ஒரு அக்ரஷனே இல்லை.

“ தென் ஆப்பிரிக்காவை பொறுத்தமட்டில், ஒரு நிலையான பேட்டிங் ஆர்டர், தரமான பவுலிங் யூனிட் என்று பாகிஸ்தானைக் காட்டிலும் நிறையவே அதன் கைகள் மேலோங்கி இருப்பதால், இன்றைய போட்டியில் வெற்றி தென் ஆப்பிரிக்காவின் பக்கம் சரிய வாய்ப்பு இருக்கிறது “

About Author