Bigg Boss Tamil 7 | Day 44 | Review | ‘விசித்ராவின் ஆட்டம் கண்டு விரக்தி கொள்கிறார்களா பூர்ணிமா, மாயா?’
பிக்பாஸ் தமிழ் சீசன் 7-யின், நாற்பத்து நான்காம் நாளில் நிகழ்ந்த சுவாரஸ்யமான விஷயங்களை ஒரு தொகுப்பாக இங்கு பார்க்கலாம்.
ஹைலைட்ஸ்: அக்ஷயா VS விஷ்ணு – பூர்ணிமா VS தினேஷ் – சுமை தாங்கி, ஷாப்பிங் ரீ பேபெண்ட் டாஸ்க் – மணி, அர்ச்சனாவை பற்றி – ஸ்டார் லட்டு டாஸ்க் – விசித்ரா, ஜோவிகாவை பற்றி – பூர்ணிமா, மாயா கான்வர்சேஷன்
’சிறு புறாவுக்கு போரா, பெரிய அக்கப்போராக அல்லவா இருக்கிறது’, என்பது போல மில்க் கேட்டதற்கு அக்ஷயாவிடம் அந்த பொங்கு பொங்குகிறார் விஷ்ணு. ஏற்கனவே 3 முறை அக்ஷயா கிச்சன் டீமிடம் கேட்டதாக கூறப்படுகிறது. அவர் கேட்டது என்னவோ பிராவோவிடம், பொங்கியது என்னவோ விஷ்ணு. ‘நீ என்ன ஷீட்டிங்குக்கு வந்த மாறி பண்ணிட்டு இருக்க, நீ எல்லாம் எனக்கு ஒரு ஆளே கிடையாது’ என மரியாதைக்குறைவாக அக்ஷயாவை விமர்சித்ததை எல்லாம் ஏற்றுக் கொள்ள முடியாது. இதே விஷ்ணு தான் மரியாதை பற்றி வீக் எண்ட் எபிசோடில் பாடம் எடுத்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பாத்திரத்தில் சமையல் செய்த சிறிது கழிவுகள் இருப்பது வழக்கம் தான், ஆனால் ’அதெல்லாம் இருக்க கூடாது, இனிமே அதை கொட்டிட்டு கொடுக்க சொல்லுங்க’ என கேப்டன் தினேஷ்சிடம் வாக்குவாதமே இல்லாத ஒரு விஷயத்திற்கு, வாக்குவாதம் செய்து சண்டை போட்டுக் கொண்டு இருந்தார் பூர்ணிமா. ஒரு சாப்பிட்ட தட்டில் இருக்கும் கழிவுகள் பிறரின் எச்சாக இருக்கும் என்பதனால் அதை குப்பை தொட்டியில் போட்டு விட்டு தட்டுகளை போட சொல்லி போன வாரம் வெஸ்சல் வாஷிங் டீம் கோரிக்கை விடுத்து இருந்ததை மனதில் வைத்துக் கொண்டு சமையல் பாத்திரத்திலும் அதை கடைப்பிடிக்கிறாராம்.
ஷாப்பிங் ரீ பேமெண்ட் டாஸ்க், சுமை தாங்கி, இல்லத்தில் நான்கு போட்டியாளர்கள் இந்த டாஸ்க்கை விளையாட வேண்டும். கார்டன் ஏரியாவில் இருக்கும் ஒரு நிலையில், பிரிக்கை தலையோடு தாங்கியவாறு நிற்க வேண்டும். இது பஸ்சர் டு பஸ்சர் டாஸ்க். பஸ்சர் அடிக்கும் வரை குறைந்தபட்சம் 3 போட்டியாளர்களாவது பிரிக்கை தாங்கி கொண்டு நிற்க வேண்டும். இல்லையேல் மெயின் பெட் ரூம் மூடப்படும் என்பது அறிவிப்பு. இரண்டு முறை இந்த டாஸ்க்கில் வாய்ப்பு கொடுக்கப்பட்ட போதும் டாஸ்க்கில் போட்டியாளர்களால் ஜெயிக்க முடியவில்லை. இருமுறையும் மாயா கடைசி வரை பிரிக்கை தாங்கி கொண்டு நின்றது பாராட்டத்தக்கது.
’சின்ன சின்ன வேலை கூட அர்ச்சனா செய்ய மாட்றா, எல்லா வேலையும் நம்ம தலைல கட்டி விட்டுறா, ஏதாச்சு கேட்டா அழுக ஆரம்பிச்சிடுறா, கேக்கவுமே ஒரு மாறி இருக்கு’ ரெண்டு பாத்ரூமையும் கழுவிட்டு ஒரு ஷிங்க மட்டும் தான் கழுவ சொன்னேன் அத கழுவுறதுக்கு கூட சோம்பேறித்தனம் படுறா. அப்ப அர்ச்சனா நம்ம வீட்டுல நம்ம டெய்லி பாக்குற ஒரு லிட்டில் பிரின்ஸஸ் தான் போலயே,
ஸ்டார் லட்டு டாஸ்க், ஒவ்வொருவரும் மூன்று லட்டுகள் கையில் எடுக்க வேண்டும், ஒன்று தனக்கு, இன்னொன்று தான் இந்த வீட்டில் நண்பராக இருக்கும் ஒருவருக்கு, இன்னொன்று தான் எதிரியாக நினைக்கும் ஒருவருக்கு கொடுக்க வேண்டும். கொடுத்த லட்டுகளை அப்போதே பிரித்து பார்த்து உள்ளே ஸ்டார் இருக்கிறதா என பார்த்துக் கொள்ளலாம். டாஸ்க் வாரம் முழுக்க நடைபெறும் என கூறப்படுகிறது. இறுதியில் யாரிடம் ஸ்டார் அதிகமாக இருக்கிறதோ அவர் அடுத்த வாரம் இருவரை டைரக்டாக நாமினேசன் செய்யலாம்.
போட்டியாளர் | நட்பு லட்டு பெற்றவர் | எதிரி லட்டு பெற்றவர் |
மாயா | ரவீனா | விஷ்ணு |
ரவீனா | விஷ்ணு | மாயா |
மணி | கூல் சுரேஷ் | தினேஷ் |
தினேஷ் | கூல் சுரேஷ் | பூர்ணிமா |
விசித்ரா (ஸ்டார்) | அர்ச்சனா | ஜோவிகா |
அர்ச்சனா | விசித்ரா (ஸ்டார்) | பூர்ணிமா |
பிராவோ | மாயா | மணி சந்திரா |
நிக்ஸன் | விக்ரம் | மணி சந்திரா (ஸ்டார்) |
பூர்ணிமா | அர்ச்சனா | விசித்ரா |
ஜோவிகா | விக்ரம் | விசித்ரா |
ஆக மொத்தம் தான் தனக்கென்று எடுத்த லட்டில் ஒரு ஸ்டார், அர்ச்சனா கொடுத்த நட்பு லட்டில் ஒரு ஸ்டார் என இரண்டு ஸ்டார்களை பெற்று விசித்ரா தற்போது லீடிங்கில் இருக்கிறார். மணிக்கு நிக்ஸன் கொடுத்த எதிரி லட்டில் ஒரு ஸ்டார் கிடைத்தது அவர் தற்போது இரண்டாம் இடம் வகிக்கிறார்.
விசித்ரா அவர்கள் ஜோவிகா குறித்து சொல்வது 100 சதவிகிதம் சரியே, ஜோவிகா தனியாக விளையாடும் போது அவரது ஒவ்வொரு முடிவையும் அவர் சரியாகவே எடுத்தார். தற்போது தனது மூளையை கலட்டி மாயாவிடம் கொடுத்து விட்டு அவர் நகர்த்தும் பொம்மை போல நகர்ந்து கொண்டு இருக்கிறார். அந்த கும்பலில் இருந்து வெளியே வந்து தனது தனித்திறனை காட்டினால் மட்டுமே ஜோவிகா மேலும் இந்த போட்டியில் நீடிக்க முடியும் என்பதில் ஐயமில்லை.
வீக் எண்டில் விசித்ராவிற்கு ஆடியன்ஸ் கைதட்டியது, கமல் அவர்கள் விசித்ராவை பாராட்டியது, தற்போது லட்டு டாஸ்க்கில் இரண்டு ஸ்டார்கள் கிடைத்தது, என எல்லாம் மாயா மற்றும் பூர்ணிமாவிற்கு வயிற்றெரிச்சலை கிளப்பி இருக்கிறது போல. ‘நான் அவங்கள வீக்னு நினைச்சேன், ஆனா அவங்க செம்மையா கேம் ஆடுறாங்க, ஒருத்தங்கள அப்படியே நம்ப வச்சு அவங்க பக்கம் இழுத்து, பின்னாடி அவங்களேயே குத்தி விட்டுறது தான் அவங்க கேம்’ என பூர்ணிமா விசித்ரா பற்றி கூறியது சிரிப்பை தான் வரவழைத்தது. யஸ் க்யூஸ்மி அது கண்டாடி மேடம் என்று தான் சொல்ல தோன்றியது.
“ அடுத்தவர்களின் குறையையும், காஸிப்ஸ்களையும் மட்டுமே நாள் முழுக்க கூறிக் கொண்டு பேசிக் கொண்டு, தங்களது குறைகளை எளிதாக மறைத்து ஒரு துரோக விளையாட்டு விளையாடுபவர்கள் தான் மாயாவும், பூர்ணிமாவும், அதை உள்ளே அறிந்து கொண்டு விளையாடிய ஒரே போட்டியாளர் பிரதீப், அதனால் தான் ஏனோ அவரை வாய்ப்பு கிடைத்ததும் வச்சு செய்து விட்டார்கள் “
மீண்டும் நாளைய பிக்பாஸ் ரிவ்யூவில் சந்திப்போம். இப்படிக்கு இடம்பொருள் இல்லத்தில் இருந்து உங்கள் லெ. ரமேஷ் !