Bigg Boss Tamil 7 | Day 49 | Review | ‘அழுது, பேச திணறி, தலை குனிந்து நின்ற பூர்ணிமா’
பிக்பாஸ் தமிழ் சீசன் 7-யின், நாற்பத்து ஒன்பதாம் நாளில் நிகழ்ந்த சுவாரஸ்யமான விஷயங்களை ஒரு தொகுப்பாக இங்கு பார்க்கலாம்.
ஹைலைட்ஸ்: 50 ஆவது எபிசோடு – குழப்பமடைந்த பூர்ணிமா – வெற்றி நடை, வெட்டி நடை – தினேஷ் கேப்டன்சி பற்றி – விதி மீறல் சம்பவம் பற்றி – ஜோவிகா VS விசித்ரா – எவிக்சன் – புத்தக பரிந்துரை
பிக்பாஸ் தமிழின் ஏழாவது சீசனின் 50 ஆவது எபிசோடிற்கான வாழ்த்துக்களை போட்டியாளர்களிடம் தெரிவித்தார் கமல்ஹாசன். ஒவ்வொருவரும் இந்த பிக்பாஸ்சால் தங்களுக்குள் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்து விளக்கினர். தைரியம் பிறந்து இருக்கிறது, எதிர்த்து கேள்வி கேட்க முடிகிறது, என்னை உணர முடிகிறது, என்னை திருத்திக் கொள்ள முடிந்தது என பலரும் தங்களது கருத்துக்களை கூறினர்.
ஒவ்வொரு முறையும் தினேஷ், அர்ச்சனா, விசித்ராவிற்கு வரும் கைதட்டல்கள் பார்த்து உடைந்து போகிறார் பூர்ணிமா. தனக்கு கைதட்டல் வேண்டும் என்றால் அதற்காக ஏதாவது செய்து இருக்க வேண்டும். உண்மைகளை பேசி இருக்க வேண்டும், வெளிப்படைத்தன்மையாக இருக்க வேண்டும். காஸிப்ஸ்கள் பேசிக் கொண்டே இருந்தால் கிடைத்து விடுமா என்ன? தன் தவறை உணர்ந்து கொள்ள கூட தயாராக இல்லாத பூர்ணிமா அவர்களுக்கு மக்கள் எப்படி கைதட்ட துணிவார்கள்?
இந்த வீட்டில் வெற்றி நடை போடுபவர்களின் பிம்பத்தை நேராகவும், வெட்டி நடை போடுபவர்களின் பிம்பத்தை தலை கீழாகவும் வைத்து அதற்கான காரணங்களையும் முன்மொழிய வேண்டும் என்பது டாஸ்க்.
போட்டியாளர்கள் | வெற்றி நடை | வெட்டி நடை |
தினேஷ் | மாயா | விசித்ரா |
ரவீனா | அர்ச்சனா | மாயா |
மணி | கூல் சுரேஷ் | மாயா |
அர்ச்சனா | மாயா | பூர்ணிமா |
விசித்ரா | மாயா | பூர்ணிமா |
விக்ரம் | விஷ்ணு | பிராவோ |
கூல் சுரேஷ் | ரவீனா | விக்ரம் |
நிக்ஸன் | தினேஷ் | கூல் சுரேஷ் |
ஜோவிகா | விக்ரம் | பிராவோ |
விஷ்ணு | அர்ச்சனா | மாயா |
மாயா | பூர்ணிமா | நிக்ஸன் |
பூர்ணிமா | விக்ரம் | அர்ச்சனா |
கானா பாலா | தினேஷ் | அர்ச்சனா |
பெரும்பாலான வெற்றி நடைகளையும், வெட்டி நடைகளையும் மாயா பெற்று இருந்தார். இரண்டையுமே அவர் நேர்மறையாக தான் பார்ப்பதாகவும், தன்னுடைய விளையாட்டிற்கு இந்த இரண்டு டைட்டிலுமே உந்துதலாக தான் இருக்கும் என்று கருத்து தெரிவித்தார்.
தினேஷ் அவர்களின் கேப்டன்சி குறித்து அனைவருமே பாசிட்டிவாக தான் கூறினர். ரொம்ப ஸ்ட்ரிக்டாக இருந்தாலும் கூட அனைத்து விதிமுறைகளையும் சரியாக கையாண்டார் என அனைவரும் ஒரு மனதாக கூறியது போல இருந்தது. இந்த வாரமும் அவர் தான் கேப்டன் என்பது குறிப்பிடத்தக்கது.
வந்த நிலையில் இருந்து திசை மாறி சென்று கொண்டு இருக்கிறோம் என்று ஒப்புக் கொண்டு விட்டு, மீண்டும் அதே தவறை தான் செய்து கொண்டு இருக்கிறார் ஜோவிகா. தனக்கு அட்வைஸ் கூறி தன்னை நல்ல நிலையில் பார்க்க வேண்டும் என்று நினைப்பவர்களை தள்ளி வைத்து விட்டு, கூட சேர்த்து கொண்டு அவரது Downfall-யை ரசிக்கின்ற மாயா & கோ தான் அவருக்கு பிடித்து இருக்கிறது போல.
மக்களின் ஓட்டுக்களை இந்த வாரம் குறைவாக பெற்ற கானா பாலா இல்லத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார். தன்னுடைய மியூச்சிவல் பண்ட்ஸ் காயினை ரவீனாவிற்கு கொடுத்து விட்டு, அனைவருக்கும் அட்வைஸ்கள் கொடுத்து விட்டு, ஜி ஸ்குவர் நினைவுகளுடன் இல்லத்தை விட்டு வெளியேறினார் கானா பாலா.
புத்தக பரிந்துரையின் கீழ் இந்த வாரம் மு ராஜேந்திரன் அவர்கள் காலா பாணி அவர்கல் எழுதிய புத்தகத்தை பரிந்துரை செய்தார். விடுதலைப் போராட்டத்தின் போது நாடுகடத்தப்பட்ட சிவகங்கை மன்னர்களின் வரலாற்றையும் அவர்கள் சிறைகளிலும், பயணத்தின் போதும் பட்ட கஸ்டத்தையும் கொடுமைகளையும் கூறும் நாவல் இது.
புத்தகத்தை வாங்க நினைப்பவர்கள் இந்த லிங்கை பயன்படுத்தி வாங்கி கொள்ளலாம்.
https://www.flipkart.com/kaala-paani/p/itm69ab96f725eba
” பூர்ணிமா ஒரு தனித்திறமையாளர் தான், அவரை முழுக்க முழுக்க ஒரு வன்மம் மிக்க போட்டியாளராக மாற்றி பெருமை அவரது நட்பு மாயாவையே சேரும் “
மீண்டும் நாளைய பிக்பாஸ் ரிவ்யூவில் சந்திப்போம். இப்படிக்கு இடம்பொருள் இல்லத்தில் இருந்து உங்கள் லெ. ரமேஷ் !