Bigg Boss Tamil 7 | Day 57 | Review | ‘இல்லத்தார்களின் சூழ்ச்சிகளால் பறிபோகுமா நிக்ஸனின் கேப்டன் பதவி?’

Bigg Boss Tamil 7 Nixen Removing Band Rule Break Idamporul

Bigg Boss Tamil 7 Nixen Removing Band Rule Break Idamporul

பிக்பாஸ் தமிழ் சீசன் 7-யின், ஐம்பத்து ஏழாம் நாளில் நிகழ்ந்த சுவாரஸ்யமான விஷயங்களை ஒரு தொகுப்பாக இங்கு பார்க்கலாம்.

ஹைலைட்ஸ்: உரிமை மணி அறிமுகம் – ஸ்மால் பாஸ் ஹவுஸ்மேட்ஸ் செலக்சன் – டைரக்ட் நாமினேசன் – மாயா பூர்ணிமா கான்வர்சேஷன் – கேப்டனுக்கு எதிராக ஒலித்த முதல் மணி – ஹரீஷ் கல்யான் என்ட்ரி

Bigg Boss Tamil 7 Day 57 Urimai Mani Against Captains Aathikkam Idamporul
Bigg Boss Tamil 7 Day 57 Urimai Mani Against Captains Aathikkam Idamporul


உரிமை மணி, இது எதுக்குன்னா, கேப்டனால் யாருக்கேனும் அநீதி இழைக்கப் பட்டாலோ, இல்லை கேப்டன் சரியாக செயல்படவில்லை என்றாலோ இந்த மணியை அடித்து கேப்டனிடம் ஹவுஸ்மேட்ஸ் அனைவரும் விளக்கம் கேட்கலாம். விளக்கம் ஏற்றுக் கொள்ளும்படியாக இருக்கும் பட்சத்தில் பிரச்சினை இல்லை. ஆனால் விளக்கம் பெரும்பாலான இல்லத்தார்களால் ஏற்றுக் கொள்ளப்படாத பட்சத்திலும், மூன்று முறை அவ்வாறு மணி அடிக்கப்பட்டு விளக்கம் ஏற்றுக் கொள்ளப் படவில்லை எனில் கேப்டன் பதவி பறிக்கப்பட்டு, அடுத்த வாரத்திற்கான நேரடி நாமினேசனுக்குள்ளும் கேப்டன் சென்று விடுவார். இதுவே இந்த மணியின் ஸ்பெசல்.

Bigg Boss Tamil 7 Day 57 Selecting Small Boss Members Idamporul
Bigg Boss Tamil 7 Day 57 Selecting Small Boss Members Idamporul


இந்த வார ஸ்மால் பாஸ் ஹவுஸ்மேட்ஸ் செலக்சனுக்காக கேட்கப்பட்ட கேள்வி, வரப்போகும் அடுத்த 6 வாரத்தில் எந்த எந்த போட்டியாளர்கள் எவிக்ட் ஆகுவார்கள் என்று நினைக்கிறீர்கள் என்பது தான். நிக்ஸனின் வரிசைப்படி 1) விக்ரம் 2) அர்ச்சனா 3) பூர்ணிமா 4) விஷ்ணு 5) கூல் 6) விஜய் , அவர் சொன்னதுலயே விக்ரம், பூர்ணிமா தவிர்த்து மீதி எல்லாமே பருத்தி மூட்டைங்க தான், அவங்களாம் நிச்சயமா குடோன விட்டு போகுற ஆட்களே இல்லை என்பது உண்மை.

Bigg Boss Tamil 7 Day 57 Direct Nomination Idamporul
Bigg Boss Tamil 7 Day 57 Direct Nomination Idamporul


இன்னும் ஆட்டத்தை விறுவிறுப்பாக்க இந்த வாரம் டைரக்ட் நாமினேசனை அறிமுகப்படுத்தினார் பிக்பாஸ். அதற்காக ஒவ்வொருவருக்கும் ஒரு தோள் பையும், பிளாஸ்மா முன்பு அவரவர் பெயர் போட்ட கற்களும் இருந்தது. நாமினேட் செய்ய நினைப்பவர்கள் தன்னுடைய இரண்டு சதுர வடிவ கற்களை தான் நாமினேட் செய்யும் இருவரின் பைகளிலும் போட வேண்டும் என்பது டாஸ்க்.

ஸ்மால் பாஸ் போட்டியாளர்கள்நாமினேட் செய்யப்பட்டவர்கள்
அர்ச்சனாஜோவிகா, அனன்யா
பூர்ணிமாமணி, அனன்யா
விஷ்ணுஅனன்யா, ஜோவிகா
கூல்விசித்ரா, மாயா
விஜய்மணி, ரவீனா
விக்ரம்மணி, விசித்ரா
பிக்பாஸ் போட்டியாளர்கள்நாமினேட் செய்யப்பட்டவர்கள்
தினேஷ்விக்ரம், விஷ்ணு
அனன்யாகூல் சுரேஷ், பூர்ணிமா
நிக்ஸன்அர்ச்சனா, விக்ரம்
ஜோவிகாகூல் சுரேஷ், விக்ரம்
விசித்ராகூல் சுரேஷ், விக்ரம்
மணிவிஜய், பூர்ணிமா
ரவீனாவிக்ரம், பூர்ணிமா
மாயா விக்ரம், பூர்ணிமா


ஒட்டு மொத்தமாக நாமினேட் செய்யப்பட்டவர்கள்: ஜோவிகா, அனன்யா, விசித்ரா, மணி, விக்ரம், கூல் சுரேஷ், தினேஷ் மற்றும் பூர்ணிமா

Bigg Boss Tamil 7 Day 57 Maya Poornima Conversation Idamporul
Bigg Boss Tamil 7 Day 57 Maya Poornima Conversation Idamporul


நடக்கும் அனைத்தையும் பார்த்து விட்டு பூர்ணிமா தனது மொத்த கான்பிடன்ஸையும் இழந்து விட்டார். அர்ச்சனா அழுததை விட அதிகமாக, பூர்ணிமா தற்போது இரண்டு வாரங்களாக தொடர்ந்து அழுது கொண்டு இருக்கிறார். ’உங்கள் மீது இரண்டு பேர் கல்லை தூக்கி எறிகிறார்கள், ஒன்று நீங்கள் அதை வாங்கிக் கொள்ள வேண்டும், இல்லையேல் அந்த கல்லை எடுத்து மீண்டும் அவர்கள் மீது எறியவும் செய்யலாம்’ என மாயா, பூர்ணிமாவுக்கு ஆறுதல் கூறிக் கொண்டு இருந்தார். இது ஆறுதல் போல இல்லை ஏத்தி விடுவது போல இருந்தது.

Bigg Boss Tamil 7 Day 57 Dinesh Ranging Bell Idamporul
Bigg Boss Tamil 7 Day 57 Dinesh Ranging Bell Idamporul


அனன்யா வந்த போது ஒவ்வொருவருக்கும் போட்டு விட்ட டாக்குகளை அவரவர் இஸ்டத்திற்கு கலட்டுவதாகவும், இஸ்டத்திற்கு அணிந்து கொள்வதாகவும் இதை கேப்டன் கண்டு கொள்ளவில்லை என்றும் புகார்களை கூறி தினேஷ் புகார் மணியை அடித்தார். எல்லார்கிட்டயும் பொதுவா ஒழுங்கா போடுங்கன்னு சொல்லியாச்சு, ஒவ்வொருவருக்கும் நான் தனி தனியா போட்டு விடுங்கன்னு சொல்ல முடியாது, மாட்டியும் விட முடியாது என நிக்ஸன் விளக்கம் அளித்தார். அவரது விளக்கத்தை அனைவரும் ஏற்றுக் கொண்டதால் இந்த முறை தப்பினார். ஆனால் அவரே அடிக்கடி பேண்டை கலட்டி கலட்டி மாட்டுகிறார் என்பது தொடர்ந்து வீடியோக்களில் பதிவாகி வருகிறது.

Bigg Boss Tamil 7 Day 57 Harish Kalyan Entry To BB Idamporul
Bigg Boss Tamil 7 Day 57 Harish Kalyan Entry To BB Idamporul


அடுத்தகட்டமாக பிக்பாஸ் இல்லத்தின் முன்னாள் போட்டியாளர் ஹரீஷ் கல்யாண் அவரது ‘பார்க்கிங்’ பட புரோமோசனுக்கு உள் நுழைந்தார். அவர் ஒரு கோல்டு ஸ்டாரோடு உள்நுழைகிறாராம், எந்த வீடு அவரை வெல்கம் செய்வதிலும், உபசரிப்பதிலும் சிறப்பாக செயல்பட்டதோ, அந்த வீட்டுக்கு அந்த கோல்டு ஸ்டாரை அவரை வழங்க வேண்டுமாம். இரண்டு வீடுகளுமே வெறித்தனமாக நடனமாடி ஹரீஷ் அவர்களை வரவேற்றது மாஸ்சாக இருந்தது. ‘நீங்க தனியா ஓடினா ஸ்பீடா ஓடலாம், அதுவே ஒருத்தங்களோட கைய பிடிச்சிக்கிட்டு ஓடினா உங்களால ஸ்பீடா ஓட முடியாது, இவ்ளோ தான் பிக்பாஸ்’ என ஹரீஷ் திருக்குறள் போல பிக்பாஸ்சை இரண்டு வரிகளில் முடித்தது மாஸ்.

“ தொடர்ந்து நிக்ஸனை நகர்த்த அவரது டீம்களே காய் நகர்த்தி வருகிறது, சூழ்ச்சிகளில் சிக்குவாரா என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம் “

மீண்டும் நாளைய பிக்பாஸ் ரிவ்யூவில் சந்திப்போம். இப்படிக்கு இடம்பொருள் இல்லத்தில் இருந்து உங்கள் லெ. ரமேஷ் !

About Author