ஆயில் விளம்பரத்தில் ஆரம்பித்து ஹாலிவுட் வரை சென்று இருக்கும் அவந்திகா வந்தனப்பு!

From Fortune Oil Ad To Hollywood Movie Avantika Idamporul

From Fortune Oil Ad To Hollywood Movie Avantika Idamporul

பிரபல ஆயில் விளம்பரத்தில் நடனக்கலைஞராக அறிமுகம் ஆகி ஹாலிவுட் வரை சென்று இருக்கும் அவந்திகா வந்தனப்பு குறித்த ஒரு சிறப்பு தொகுப்பு தான் இது.

தெலுங்கானாவை பூர்விகமாக கொண்ட அவந்திகா வந்தனப்பு முழுக்க முழுக்க அமெரிக்காவிலேயே பிறந்து வளர்ந்தவர். சிறுவயதிலேயே நடனத்தில் ஈடுபாடு மிக்கவர். பரதநாட்டியம், குச்சிப்பிடி உள்ளிட்ட நடனங்களை நன்கு அறிந்தவர். ஜீ டெலிவிஷன் நார்த் அமெரிக்கா எடிசன் நடத்திய ’டான்ஸ் இந்தியா டான்ஸ்’ நிகழ்ச்சியில் பங்கேற்று இரண்டாம் இடம் பிடித்தவர்.

பிரபல ஆயில் விளம்பரம் ஒன்றின் மூலம் நடனகலைஞராக அறிமுகம் ஆன அவந்திகா வந்தனப்பு. அதற்கு பின்னர் மகேஷ் பாபு அவர்களின் பிரம்மோத்சவம், நாக சைதன்யாவின் பிரேமம் உள்ளிட்ட பல படங்களிலும் சிறுமி வேடங்களில் நடித்து இருக்கிறார். தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களை மட்டுமே ஏற்று நடித்து வந்த அவந்திகா, தற்போது ஹாலிவுட்டில் வெளியாகி இருக்கும் ‘Mean Girls’ என்னும் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்து நல்ல வரவேற்பையும் பெற்று வருகிறார்.

“ ஆயில் விளம்பரத்தில் இருந்து ஹாலிவுட் வரை சென்று இருக்கும் அவந்திகா வந்தனப்பு அவர்களுக்கு இணையத்தில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன “

About Author