அடுத்த பிறப்பில் நடிகை பூர்ணாவின் மகனாக பிறக்க ஆசைப்படுகிறேன் – மிஷ்கின்

Director Mysskin Wants To Be Son Of Poornima In Next Birth Idamporul

Director Mysskin Wants To Be Son Of Poornima In Next Birth Idamporul

’டெவில்’ திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் மிஷ்கின் ’அடுத்த ஜென்மத்தில் நடிகை பூர்ணாவின் மகனாக பிறக்க ஆசைப்படுகிறேன்’ என பேசியது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இயக்குநர் மிஷ்கின் அவர்களின் தம்பியான ஆதித்யா அவர்களின் இயக்கத்தில், நடிகர் விதார்த், பூர்ணா நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் டெவில். இத்திரைப்படம் வரும் பிப்ரவரி 2 அன்று திரைக்கு வர இருக்கும் நிலையில் படக்குழுவினர் படத்தின் புரோமோசனுக்காக நேற்றைய தினம் செய்தியாளர்களை சந்தித்தனர்.

இப்படத்திற்கு இசையமைப்பாளராக அவதாரம் எடுத்து இருக்கும் மிஷ்கின் பத்திரிக்கையாளர்களிடையே பேசிய போது, ’நடிப்பு என்பது கேமரா ஆன் செய்யப்பட்டதும் தன் சுயத்தை இழப்பது ஆகும். அந்தவகையில் நடிகை பூர்ணா ஒரு ஆகச்சிறந்த நடிகை. அவர் ஒரு நல்ல கேர் டேக்கரும் கூட, என்னை தாய் போல கவனித்து கொள்வார், அடுத்த ஜென்மம் என்று ஒன்று இருந்தால் அவரது வயிற்றில் குழந்தையாக அவருக்கு மகனாக பிறக்க ஆசைப்படுகிறேன்’ என்று கூறினார்.

“ அவர் பூர்ணா குறித்து எமோசனலாக பேசிய அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது “

About Author