தென் மாவட்டம் பட ஒப்பந்தத்தில் கையெழுத்து இட்டாரா யுவன்? உண்மையில் நடந்தது என்ன?

Then Maavattam Yuvan RK Suresh Controversy Fact Here Idamporul

Then Maavattam Yuvan RK Suresh Controversy Fact Here Idamporul

நடிகர் ஆர் கே சுரேஷ் இயக்கி நடிக்கும் தென் மாவட்டம் திரைப்பட ஒப்பந்தத்தில் கையெழுத்து இட்டாரா யுவன், உண்மையில் நடந்தது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

ஆர் கே சுரேஷ் எழுதி இயக்கி நடிக்கும் ‘தென் மாவட்டம்’ போஸ்டர் ஒன்று இசை யுவன் என்று குறிப்பிட்டு வெளியாகி இருந்தது. போஸ்டர் வெளியான ஒரு சில மணித்துளிகளிலேயே இசையமைப்பாளர் யுவன் ’தனக்கும் இந்த படத்திற்கும் சம்பந்தம் இல்லை, இது குறித்து யாரும் என்னை அணுகவில்லை’ என்பது போல ஒரு பதிவிட்டு இருந்தார்.

இந்த பதிவை பார்த்த ஆர் கே சுரேஷ் அவர்கள் ’நன்றாக யோசித்து பாருங்கள், நாம் படத்திற்கு ஒப்பந்தம் எல்லாம் போட்டு இருக்கிறோம்’ என பதில் ட்வீட் ஒன்று போட்டு இருக்கிறார். இதன் உண்மைதன்மை என்பது என்னவென்று புரியாத புதிராகவே இருக்கிறது. ஒன்று ஆர் கே சுரேஷ் ஒப்பந்தத்தை பொதுவெளியில் வெளியிட வேண்டும். இல்லையேல் யுவன் ஒரு ஓபன் ஸ்டேட்மெண்ட் கொடுத்தாக வேண்டும்.


” யுவன் சொல்வது உண்மையா, இல்லை ஒரு வேளை ஒப்பந்தம் இட்டு வருடங்கள் ஆகி இருக்கும் அதனால் மறந்து இருப்பாரா, இல்லை ஒப்பந்தம் என்று ஒன்றும் இல்லையா என்ற பல கேள்விகளுக்கு யுவன் மீண்டும் பதிலளித்தால் தான் விடை கிடைக்கும் “

About Author