கடந்த 10 வருடத்தில் 20 மடங்கு உயர்ந்த அதானியின் சொத்து மதிப்பு!

Adani Assets Value Increases 10 Times In The Past 10 Years Idamporul

Adani Assets Value Increases 10 Times In The Past 10 Years Idamporul

கடந்த 10 வருடத்தில் மட்டும் அதானி குழுமத்தின் சொத்து மதிப்பு 20 மடங்கு உயர்ந்து இருப்பதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது.

கடந்த 2014 ஆம் ஆண்டு அதானி குழுமத்தின் சொத்து மதிப்பு 41,890 கோடியாக இருந்தது. ஆனால் தற்போது அதே அதானி குழுமத்தின் சொத்து மதிப்பு 8,45,000 கோடியாக உயர்ந்து இருக்கிறது. கிட்டதட்ட கடந்த 10 வருடத்தில் மட்டும் அதானி குழுமத்தின் சொத்து 20 மடங்காக உயர்ந்து இருப்பதாக தகவல்.

அசுர வளர்ச்சி அடைந்து இருக்கும் அதானி குழுமத்தின் பின்னனியில் முழுக்க முழுக்க ஒன்றிய அரசு இருப்பதாக கூறப்படுகிறது. பல முறைகேடுகளின் மூலம் கோடிகளை தக்க வைத்து கொண்டு இருக்கும் அதானி குழுமத்தை ஒன்றிய அரசு பல்வேறு நெருக்கடிகளில் இருந்து காப்பாற்றி வருவதாகவும் கூறப்படுகிறது.

“ கார்பரேட்டுகளின் வளர்ச்சி மக்களுக்கு எந்த வகையிலும் உதவ போவதில்லை, வேண்டுமானால் மக்களையும் அதிகாரத்தையும் அவர்களுக்கு அடிமையாக்கும் அவ்வளவு தான் என பலரும் சமூக வலைதளங்களில் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர் “

About Author