IPL 2024 | ’இன்றைய போட்டியில் கொல்கத்தாவை எதிர்கொள்கிறது பெங்களுரு’
ஐபிஎல் 2024-யின் பத்தாவது போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொள்ள இருக்கிறது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு அணி.
ஐபிஎல் 2024 சீசனின் பத்தாவது போட்டியில், ஸ்ரேயஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா அணி, டு பிளஸ்சிஸ் தலைமையிலான பெங்களுரு அணியை எதிர்கொள்ள இருக்கிறது. பெங்களுரு அணியின் ஹோம் கிரவுண்டான சின்னசாமி மைதானத்தில் வைத்து நடைபெறும் இப்போட்டி சரியாக இரவு 7:30 மணிக்கு நேரலையில் ஒளிபரப்பாகும்.
நேருக்கு நேர்
இதுவரை இரு அணிகளும் நேருக்கு நேர் மோதிய 32 போட்டிகளுள், 18 போட்டிகளில் கொல்கத்தா அணியும், 14 போட்டிகளில் பெங்களுரு அணியும் வெற்றி பெற்று இருக்கிறது.
கணிப்பு
நிச்சயம் இப்போட்டி ஒரு ஹைஸ்கோர் மேட்ச் ஆக தான் இருக்கும். அதிரடிக்கு பஞ்சம் இருக்காது. அதிரடி காட்டுவதற்கு பெங்களுரு அணியிடம் பேட்ஸ்மேன்கள் இருந்தாலும் கூட, ஒரு வேளை கொல்கத்தா அதிரடி காட்டினால் அதை கட்டுப்படுத்துவதற்கு ஒரு ஸ்ட்ராங்கான பவுலர்கள் இல்லை. அந்த வகையில் கொல்கத்தாவின் கைகள் கொஞ்சம் ஓங்கி நிற்கிறது. மிட்செல் ஸ்டார்க், சுனில் நரைன், ஹர்ஷித் ரானா, வருண் சக்கரவர்த்தி என உலகின் சிறந்த பவுலர்களை தன் வசம் வைத்து இருப்பதால் தற்போதைக்கு வெற்றி என்பது கொல்கத்தாவின் பக்கம் இருக்கிறது என்றே சொல்லலாம்
ஸ்குவாட்ஸ்
Royal Challengers Bengaluru Probable XI: Virat Kohli, Faf du Plessis (c), Cameron Green, Rajat Patidar, Glenn Maxwell, Anuj Rawat (wk), Dinesh Karthik, Alzarri Joseph, Mayank Dagar, Mohammed Siraj, Yash Dayal [Impact Substitute: Mahipal Lomror]
Kolkata Knight Riders Probable XI: Phil Salt (wk), Sunil Narine, Venkatesh Iyer, Shreyas Iyer (c), Nitish Rana, Rinku Singh, Andre Russell, Mitchell Starc, Harshit Rana, Varun Chakravarthy, Suyash Sharma/Chetan Sakariya [Impact Substitute: Ramandeep Singh]
“ தொடர்ந்து 9 போட்டிகளிலும் ஹோம்கிரவுண்டில் விளையாடிய அணிகளே ஜெயித்து இருக்கின்றன, கொல்கத்தா அதை மாற்றி அமைத்திடுமா என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம் “