IPL 2024 | ‘இன்றைய போட்டியில் லக்னோவை எதிர்கொள்கிறது பஞ்சாப் அணி’

IPL 2024 Match No 11 PBKS Facing LSG Today Idamporul

IPL 2024 Match No 11 PBKS Facing LSG Today Idamporul

ஐபிஎல் 2024 சீசனின் பதினொன்றாவது போட்டியில் லக்னோ சூப்பர் ஜியாண்ட்ஸ் அணியானது பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்கொள்ள இருக்கிறது.

இன்று நடக்கவிருக்கும் ஐபிஎல் 2024 சீசனின் பதினொன்றாவது போட்டியில் ஷிகர் தவான் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியானது, கே எல் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜியாண்ட்ஸ் அணியை எதிர்கொள்ள இருக்கிறது. லக்னோவின் அடல்பிகார் வாய்பாய் மைதானத்தில் வைத்து நடைபெறும் இப்போட்டி சரியாக இரவு 7:30 மணிக்கு நேரலையில் ஒளிபரப்பாகும்.

நேருக்கு நேர்

இதுவரை இரு அணிகளும் நேருக்கு நேர் மோதிய 3 போட்டிகளில் லக்னோ இரண்டு போட்டிகளிலும், பஞ்சாப் ஒரு போட்டிகளிலும் வென்று இருக்கிறது.

கணிப்பு

இரண்டு அணிகளும் சரியான பவர் ஹிட்டர்களை சரிக்கு சமமாக வைத்து இருக்கின்றனர். அப்படியென்றால் பேட்டிங் யூனிட்டில் இருவரும் ஈகுவல் பவர் தான். ஆனாலும் கூட பவுலிங் யூனிட்டில் சற்றே லக்னோ அணியை கம்பேர் செய்யும் போது பஞ்சாப் அணியின் கைகளே ஓங்கி இருக்கிறது. ரபாடா, அர்ஷ்தீப் சிங், ராகுல் சஹார், ஹர்ப்ரீத் பிரார் என்ற அனுபவம் வாய்ந்த பவுலிங் யூனிட்டை பஞ்சாப் தன் வசம் வைத்து இருப்பதால் இந்த போட்டியின் வெற்றி வாய்ப்பு சற்றே பஞ்சாப் வசம் இருக்கிறது.

ஸ்குவாட்ஸ்

Lucknow Super Giants Probable XI: KL Rahul (c&wk), Quinton de Kock, Ayush Badoni, Nicholas Pooran, Marcus Stoinis/Kyle Mayers, Krunal Pandya, Ravi Bishnoi, Mohsin Khan, Yash Thakur, Naveen-ul-Haq. [Impact substitute: Deepak Hooda]

Punjab Kings Probable XI: Shikhar Dhawan(c), Jonny Bairstow, Prabhsimran Singh, Jitesh Sharma(wk), Sam Curran, Liam Livingstone, Shashank Singh, Harpreet Brar, Kagiso Rabada, Rahul Chahar.
[Impact substitute: Arshdeep Singh]

“ இரு அணிகளுமே ஒரு போர் ஆன மேட்ச்சை ரசிகர்களுக்கு படைப்பதில் வல்லவர்கள், இந்த மேட்ச்சையாவது சுவாரஸ்யமாக நகர்த்துவார்களா என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம் “

About Author