ஐபிஎல் 2024 | ‘ஹாட்ரிக் வெற்றியை ருசித்த ராஜஸ்தான் ராயல்ஸ், புள்ளிப்பட்டியலிலும் முதலிடம்!’

IPL 2024 Hatrick Victories For Rajasthan Royals Idamporul

IPL 2024 Hatrick Victories For Rajasthan Royals Idamporul

நேற்றுக்கு மும்பைக்கு எதிரான போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதன் மூலம் ராஜஸ்தான் அணி ஹாட்ரிக் வெற்றியை ருசித்து புள்ளிப்பட்டியலிலும் முதலிடத்திற்கு முன்னேறி இருக்கிறது.

நேற்று நடைபெற்ற ஐபிஎல் 2024 சீசனின் 14 ஆவது போட்டியில் ராஜஸ்தான் அணியை தனது ஹோம்கிரவுண்டான, வான்கடே மைதானத்தில் எதிர்கொண்டது மும்பை அணி. ஹோம்கிரவுண்ட் என்பதால் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மும்பை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 125 ரன்கள் மட்டுமே எடுத்தது. ரோஹிட், நமன் திர், டெவால்ட் பிரேவிஸ் போன்ற மூன்று நட்சத்திர வீரர்கள் போல்ட் பந்து வீச்சில் டக் அவுட் ஆகி வெளியேறியது மும்பை அணிக்கு பின்னடை ஏற்படுத்தியது.

அதற்கு பின் ஆடிய ராஜஸ்தான் அணி துவக்கத்தில் திணறினாலும் கூட, அதற்கு பின் சுதாரித்து பொறுமையாக ஆடி 15.3 ஓவர்களிலேயே இலக்கை எளிதாக துரத்தி பிடித்தனர். அதிகபட்சமாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ரியான் பராக் 54(39) ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் அணியின் வெற்றிக்கு உறுதுணை புரிந்தார். இந்த வெற்றியின் மூலம் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் அணி ஹாட்ரிக் வெற்றியை ருசித்து புள்ளிப்பட்டியலிலும் முதலிடத்திற்கு முன்னேறி இருக்கிறது.

“ மும்பை அணியை அதன் ஹோம்கிரவுண்டிலேயே அடித்து, ராஜஸ்தான் ரசிகர்களுக்கு வெற்றி விருந்தை சமர்ப்பித்து இருக்கிறார் கேப்டன் சஞ்சு சாம்சன் “

About Author