IPL 2024 | Match No 16 | ‘இன்றைய போட்டியில் கொல்கத்தாவை எதிர்கொள்கிறது டெல்லி’

IPL 2024 Match No 16 KKR Facing DC Today Idamporul

IPL 2024 Match No 16 KKR Facing DC Today Idamporul

ஐபிஎல் 2024 சீசனின் 16 ஆவது போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொள்ள இருக்கிறது, டெல்லி கேபிடல்ஸ் அணி.

ஐபிஎல் 2024 சீசனின் 16 ஆவது மற்றும் இன்றைய போட்டியில், ஸ்ரேயஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா அணியானது, ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி அணியை எதிர்கொள்ள இருக்கிறது. டெல்லி அணியின் ஹோம் கிரவுண்டான விசாகப்பட்டினத்தில் நடக்கும் இப்போட்டி சரியாக இரவு 7:30 மணிக்கு நேரலையில் ஒளிபரப்பாகும்.

நேருக்கு நேர்

இதுவரை இரு அணிகளும் நேருக்கு நேர் மோதிய 31 போட்டிகளில் 15 போட்டியில் டெல்லி அணியும், 16 போட்டிகளில் கொல்கத்தா அணியும் வெற்றி பெற்று இருக்கிறது.

கணிப்பு

சென்னை அணியுடன் வெற்றி பெற்ற உத்வேகத்தில் டெல்லி அணி நிச்சயம் ஒரு புதிய ரூபத்தில் களம் இறங்கும். நிச்சயம் அந்த வெற்றி அவர்களுக்குள் ஒரு பாசிட்டிவிட்டி கொடுத்து இருக்கும். இரு அணிகளுமே சரிசமமான பலத்துடன் இருந்தாலும் கூட டெல்லி அணியின் மிடில் ஆர்டர் நம்பத்தகுந்ததாக இல்லை. அதே சமயத்தில் கொல்கத்தாவில் ரஸ்சல், ரிங்கு என மிடில் ஆர்டரின் பலம் அட்டகாசமாக இருக்கிறது. அப்படிப்பார்க்கும் போது வெற்றி வாய்ப்பு என்பது கொல்கத்தா பக்கமே தற்போதைக்கு இருக்கிறது.

ஸ்குவாட்ஸ்

Delhi Capitals Probable XI: Prithvi Shaw, David Warner, Mitchell Marsh, Rishabh Pant(w/c), Tristan Stubbs, Abishek Porel, Axar Patel, Anrich Nortje, Mukesh Kumar, Ishant Sharma, Khaleel Ahmed.
[Impact Sub: Sumit Kumar/Rasikh Dar Salam]

Kolkata Knight Riders Probable XI: Philip Salt(w), Venkatesh Iyer, Shreyas Iyer(c), Ramandeep Singh, Rinku Singh, Andre Russell, Sunil Narine, Mitchell Starc, Anukul Roy, Harshit Rana, Varun Chakaravarthy.
[Impact Sub: Suyash Sharma/Vaibhav Arora]

“ ஹாட்ரிக் வெற்றியை நோக்கி கொல்கத்தா, சாம்பியனை வீழ்த்திய அதகளத்தில் டெல்லி என இரு அணிகளும் புதிய உத்வேகத்தில் களம் இறங்குவதால் இந்த ஆட்டத்தில் விறுவிறுப்பிற்கு பஞ்சம் இருக்காது “

About Author