IPL 2024 | Match No 18 | ‘இன்றைய போட்டியில் சென்னையை எதிர்கொள்கிறது ஹைதராபாத்’

TATA IPL 2024 Match No 18 CSK Facing SRH Today Idamporul

TATA IPL 2024 Match No 18 CSK Facing SRH Today Idamporul

ஐபிஎல் 2024 சீசனின் இன்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொள்ள இருக்கிறது சன்ரைசர்ஸ் ஹைதராபாத்.

இன்று நடக்க இருக்கும் ஐபிஎல் 2024-யின் பதினெட்டாவது போட்டியில், ருதுராஜ் தலைமையிலான சென்னை அணியை எதிர்கொள்ள இருக்கிறது, பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி. ஹைதராபாத் அணியின் ஹோம்கிரவுண்டில் நடைபெறும் இப்போட்டி சரியாக இரவு 7:30 மணிக்கு நேரலையில் ஒளிபரப்பாகும்.

நேருக்கு நேர்

இதுவரை இரு அணிகளும் நேருக்கு நேர் மோதிய 19 போட்டிகளில், சென்னை அணி 15 போட்டிகளிலும், ஹைதராபாத் அணி 4 போட்டிகளிலும் வெற்றி பெற்று இருக்கின்றன.

கணிப்பு

இரு அணிகளுமே அனைத்து டிபார்ட்மெண்ட்களிலும் சரி சமமான பலத்தைக் கொண்டு இருக்கின்றன. களத்தில் அணியாக, திறனை சரியான முறையில் வெளிப்படுத்துபவர்கள் வெற்றி பெறுவார்கள். நிச்சயம் ஒரு அதிரடியான களமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. தற்போதைக்கு இரு அணிகளும் தலா 50-50 என்ற வெற்றி வாய்ப்பை பெற்று இருக்கின்றன.

ஸ்குவாட்ஸ்

Sunrisers Hyderabad Probable XI: Mayank Agarwal, Travis Head, Abhishek Sharma, Aiden Markram, Heinrich Klaasen, Abdul Samad, Shahbaz Ahmed, Pat Cummins, Bhuvneshwar Kumar, Mayank Markande, Jaydev Unadkat

[Impact Sub: Washington Sundar/Umran Malik]

Chennai Super Kings Probable XI: Rachin Ravindra, Ruturaj Gaikwad, Ajinkya Rahane, Shivam Dube, Daryl Mitchell, Sameer Rizvi, Ravindra Jadeja, MS Dhoni, Deepak Chahar, Tushar Deshpande, Matheesha Pathirana/Shardul Thakur

[Impact Sub: Maheesh Theekshana/Matheesha Pathirana]

“ ருதுராஜ் தொடர்ந்து ரன்களை குவிப்பதில் சிரமப்பட்டு வருகிறார். அவர் அடித்து ஆட துவங்கி விட்டால் சென்னை அணி, இன்னும் பலம் வாய்ந்த அணியாக தெரியும் “

About Author