IPL 2024 | Match No 19 | ’இன்றைய போட்டியில் பெங்களுரு அணியை எதிர்கொள்ள இருக்கிறது ராஜஸ்தான்’

IPL 2024 Match No 19 RCB Facing RR Today Idamporul

IPL 2024 Match No 19 RCB Facing RR Today Idamporul

ஐபிஎல் 2024 சீசனின் இன்றைய போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொள்ள இருக்கிறது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு அணி.

இன்று நடக்க இருக்கும் ஐபிஎல் 2024 சீசனின் 19 ஆவது போட்டியில், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியானது, டு பிளஸ்சிஸ் தலைமையிலான பெங்களுரு அணியை எதிர்கொள்ள இருக்கிறது. ராஜஸ்தான் அணியின் ஹோம்கிரவுண்டில் நடைபெறும் இப்போட்டி சரியாக இரவு 7:30 மணிக்கு நேரலையில் ஒளிபரப்பாகும்.

நேருக்கு நேர்

இதுவரை ஆடிய இரு அணிகளும் நேருக்கு நேர் ஆடிய 30 போட்டிகளில் 15 போட்டிகளில் ராஜஸ்தானும், 12 போட்டிகளில் பெங்களுரு அணியும் வென்று இருக்கின்றன. மூன்று போட்டிகள் முடிவில்லாதவைகளாக முடிந்து இருக்கின்றன.

கணிப்பு

பெங்களுரு அணியைப் பொறுத்தவரை அதிரடியான கள வீரர்கள் நிறையவே இருக்கின்றனர். அதே சமயத்தில் 300 ரன்கள் அடித்தாலும் கூட, அதை விட்டுக் கொடுத்து எதிரணியை வெற்றி பெறச் செய்யும் பவுலர்களும் இருக்கின்றனர். அதே சமயத்தில் ராஜஸ்தான் அணியின் சமநிலை பிட் ஆக இருக்கிறது. அப்படி பார்க்கும் போது இந்த போட்டியில் வெற்றி என்பது சற்றே ராஜஸ்தான் பக்கமே இருக்கிறது.

ஸ்குவாட்ஸ்

Rajasthan Royals Probable XI: Jos Buttler, Yashasvi Jaiswal, Sanju Samson (c/wk), Riyan Parag, Dhruv Jurel, Shimron Hetmyer, Ravichandran Ashwin, Yuzvendra Chahal, Nandre Burger, Avesh Khan, Trent Boult.

[Impact substitute – Shubham Dubey]


Royal Challengers Bangalore Probable XI: Virat Kohli, Faf du Plessis (c), Rajat Patidar, Glenn Maxwell, Cameron Green, Anuj Rawat (wk), Dinesh Karthik, Mayank Dagar, Reece Topley, Mohammed Siraj, Yash Dayal.

[Impact substitute – Mahipal Lomror]


“ ராயல் சேலஞ்சர் புது புது பவுலர்களை ட்ரை செய்து பார்க்க வேண்டும், மிடில் ஆர்டர் சரியாக இருந்தாலும் கூட களத்தில் அவர்கள் பெரிதாக சோபிக்க தவறுகின்றனர். அவர்கள் பெர்பார்ம் செய்து, பவுலர்களும் கொஞ்சம் இழுத்துப் பிடித்தால் வெற்றி பெங்களுருவின் பக்கமும் சாயலாம் “

About Author