T20 WC 2024 | ‘இந்திய அணியின் மிடில் ஆர்டர் ஸ்பாட்டை குறி வைக்கும் ஷிவம் துபே’

T20 WC 24 Shivam Dube To Mark Middle Order Spot In Indian Cricket Team IdamPorul

T20 WC 24 Shivam Dube To Mark Middle Order Spot In Indian Cricket Team IdamPorul

சிஎஸ்கே அணிக்காக சிறப்பாக விளையாடி வரும் ஷிவம் துபே, இந்திய அணியின் மிடில் ஆர்டர் ஸ்பாட்டை குறி வைத்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

டி20 உலககோப்பை நெருங்கி வரும் நிலையில், அதற்கான இந்திய அணியை முன்னெடுக்கும் ஒரு சீசனாக இந்த ஐபிஎல் இருக்கும் என்பதில் ஐயமில்லை. இந்த நிலையில் அணியின் மிடில் ஆர்டர் ஸ்பாட் என்பது ஒரு அணிக்கு மிக முக்கியமான ஸ்பாட் ஆக பார்க்கப்படுகிறது. இந்திய அணியில் தற்போது அந்த ஸ்பாட்டிற்கு ரிங்கு சிங் மற்றும் ஷிவம் துபே இருவரும் போட்டி போட்டுக் கொண்டு இருக்கின்றனர்.

என்ன தான் ரிங்கு சிங் ஒரு அதிரடி வீரராக தென்பட்டாலும் கூட, ஷிவம் துபேவின் சிக்ஸர் அடிக்கும் திறன் செலக்டர்களால் அதிகம் உற்று நோக்கப்படுகிறதாம்.
அசால்ட்டாக சிக்ஸ் அடிக்கும் அவரின் அந்த பேட்டிங் ஸ்டைலை பல சீனியர் வீரர்களும் பாராட்டி வரும் நிலையில், ஸ்குவாடில் ரிங்கு சிங் இருந்தாலும் கூட, ஷிவம் துபேவை தான் பிளேயிங் 11 யை எடுக்க தான் வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.

“ ஷிவம் துபே என்னும் சிக்ஸர் மன்னனை அடையாளம் கண்டதில் சிஎஸ்கே அணி பெரும் பங்கு வகிக்கிறது, நிச்சயம் உலககோப்பையிலும் அவரின் சிக்ஸர்களுக்கு பஞ்சம் இருக்காது என்பதில் ஐயமில்லை “

About Author