ஏன் திடீரென்று உருவாகிறது நடிகர் சூரிக்கும் சந்தானத்திற்குமான கம்பேரிசன்?

Is Santhanam Soori Comparison In Social Media Unwanted Details Here Idamporul

Is Santhanam Soori Comparison In Social Media Unwanted Details Here Idamporul

சமூக வலைதளங்கள் திடீரென்று சந்தானம் வெர்சஸ் சூரி என்றதொரு கம்பேரிசனை எடுத்து முன் வைத்து இருவருக்கும் இடையில் தான் இனி போட்டி என்பது போல ஒரு பிம்பத்தை ஏற்படுத்தி வருகிறது.

பொதுவாக இந்த போட்டி என்பது தேவையில்லாத ஒன்றாக தான் பார்க்கப்படுகிறது. இருவருமே பெரிய பின்புலம் இல்லாமல் தான் இந்த நிலையை அவர்கள் இன்று அடைந்து இருக்கிறார்கள். இருவருமே தங்கள் நிலைக்கான சரியான உழைப்பையும் இங்கு கொடுத்து இருக்கிறார்கள். சந்தானத்தை எடுத்துக் கொண்டால் டெலிவிஷனில் இருந்து சினிமா, சினிமாவில் காமெடியன், காமெடியனில் இருந்து ஹீரோ என படிபடியாக இந்த நிலையை அடைந்து இருக்கிறார்.

அது போல சூரியை எடுத்துக் கொண்டால் அவர் பார்க்காத வேலையை இல்லை என்று சொல்லலாம், போஸ்டர் ஒட்டுவதில் இருந்து பெயிண்ட் அடிப்பது வரை அனைத்து வேலைகளும் செய்து வாய்ப்புகளுக்காக காத்து இருந்து இருந்து, பின்னர் சினிமாவில் நுழைந்து, காமெடியன் என்ற பெயரை பெற்று, தற்போது தன் அதீத உழைப்பினால் ஹீரோ என்ற பிம்பத்தை அடைந்து இதுவரை இரண்டு படங்களும் வெளியாகி இருக்கிறது.

சந்தானத்திற்கு ஆக்சன் படங்கள் செட் ஆகவில்லை என்றாலும் கூட காமெடி படங்கள் அவ்வப்போது வொர்க் அவுட் ஆகிறது, நடிகர் சூரி ஆக்சன் ஹீரோவாக பக்காவாக பொருந்துகிறார். இருவரும் கடந்து வந்த பாதை கடினமானது தான். ஆனால் இருவரும் தற்போது பயணிக்கும் பாதை என்பது வேறு வேறு. இருவருக்குமான பாதையே வேறு வேறு என்னும் போது இருவருக்கும் இடையில் எப்படி போட்டி இருக்க முடியும்.

“ போட்டிகளை, கம்பேரிசன்களை எல்லாம் விட்டு விட்டு இருவரின் படத்தையும் ரசிப்போம், இருவரையும் கோலிவுட்டின் பொக்கிஷங்களாக பார்ப்போம் அவ்வளவு தான் “

About Author