நூலிலையில் தோல்வியை தழுவிய மேரிகோம் – டோக்கியோ ஒலிம்பிக் 2020
டோக்கியோ ஒலிம்பிக் 51 கிலோ மகளிர் குத்துச்சண்டை பிரிவில் காலிறுதிக்கு முந்தைய ஆட்டத்தில் பதக்க பட்டியலில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்திய வீராங்கனை மேரி கோம் தோல்வியைத் தழுவினார்
ஆறு முறை உலக சாம்பியனான மேரி கோம் ஏற்கனவே இதை தனது கடைசி ஒலிம்பிக் என்று அறிவித்திருந்தார். எப்படியேனும் இந்தியாவிற்கு ஒரு பதக்கத்தை பெற்று தந்துவிட்டு விடை பெறுவார் என்று பெரிதும் எதிர்பார்த்த நிலையில் கொலம்பியாவின் இன்கிரிட் வெலன்சியாவுடன் நடைபெற்ற காலிறுதிக்கு முந்தைய போட்டியில் 2-3 என்ற கணக்கில் நூலிலையில் போராடி தோல்வியைத் தழுவினார்
ஏற்கனவே 2012 லண்டன் ஒலிம்பிக்ஸ்சில் இந்தியாவிற்காக வெண்கலப்பதக்கத்தை பெற்றுத்தந்த மேரிகோம் இந்த ஒலிம்பிக்கிலும் பதக்க பட்டியலில் இருப்பார் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை தந்திருந்தாலும் இதற்கு பிந்தைய சாதனைகளை மனதில் கொண்டு வீரமங்கையை அவர்களின் புகழ் கீரிடத்தால் அலங்கரித்து அவர்களின் சொந்த வாழ்வியலுக்கு வழிவிடுத்து வழி அனுப்பி வைப்பதே நல்ல ரசிகனுக்கு சான்று….!
“ பல முறை இந்தியக்கொடியை உலக அரங்கில் தலை நிமிரச்செய்த நீங்கள் ஒரு தோல்விக்காக, ரசிகர்களாகிய எங்களிடம் தலைகுனிய வேண்டாம் நிமிர்ந்த அதே நேரிய சிங்க நடையோடு விடைபெற்று உங்கள் வாழ்வியலை தொடங்குங்கள் மேரி கோம் – இது ஒரு ரசிகனாய் எங்களின் வேண்டுகோள் “
About Author
Auto Amazon Links: No products found.