வைஜெயந்தி நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் நாக் அஷ்வின் அவர்களின் இயக்கத்தில், பிரபாஸ், அமிதாப் பச்சன், கமல் ஹாசன், தீபிகா படுகோனே, திஷா பதானி மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் கல்கி 2898 ஏடி திரைப்படத்தின் ட்ரெயிலர் தற்போது வெளியாகி இருக்கிறது.
ட்ரெயிலரை பார்க்கும் போது ஒரு மிகப்பெரிய பொருட் செலவு கண்ணில் தெரிகிறது. பிரம்மாண்டங்கள் வியக்க வைக்கின்றன. ஹாலிவுட் திரைப்படத்திற்கு இணையான அனிமேசன் காட்சிகளை படக்குழு உருவாக்கி இருப்பது படத்திற்கு ப்ளஸ். பிரபாஸ்சின் வசனங்களில் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம் என தோன்றுகிறது.
ஒவ்வொரு காட்சியிலும் படக்குழுவினரின் பெரும் உழைப்பு தெரிகிறது. சந்தோஷ் நாராயணன் அவர்களின் பின்னனி இசை ஹாலிவுட் தரம், அமிதாப் பச்சன் ட்ரெயிலரியே நிறைய ஸ்கோர் செய்கிறார். படத்திலும் அவருக்கு நிறைய ஸ்பேஸ் இருக்கும் என நினைக்கின்றேன். கமல் ஹாசன் அவர்களின் கடைசி க்ளிம்ப்ஸ் தமிழ் ரசிகர்களுக்கு ட்ரீட்.
“ ஒட்டு மொத்தமாக பார்க்கும் போது ஒரு கற்பனை கதையை திரையில் கொண்டு வருவது என்பது மிக மிக கடினம். அதை நாக் அஷ்வின் திறம்பட திரையில் கொண்டு வந்து இருக்கிறார். படம் ஜூன் 27 அன்று உலகளாவிய அளவில் திரைக்கு வர இருக்கிறது. நாக் அஷ்வினின் திரைக்கதை மட்டும் பலம் கொடுத்தால் படம் நிச்சயம் வெற்றி தான் என்று இப்போதே எழுதி கொடுத்து விடலாம் “