மாஸ்டர் திரைப்பட வெற்றிக்குப் பிறகு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கும் அடுத்த திரைப்படம் உலக நாயகன் கமலஹாசனின் “விக்ரம்”. இந்த திரைப்படத்தில் கமல் அவர்கள் மட்டுமின்றி நடிகர் விஜய் சேதுபதி, மலையாள நடிகர் பகத் பாசில் பலர் நடிக்கிறார்கள். இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கிறார்.
இப்பொழுது வந்த புது தகவல் படி இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதியின் ஜோடியாக பகல் நிலவு சீரியல் மற்றும் பிக் பாஸ் புகழ் ஷிவானி நாராயணன் நடிப்பதாக கூறப்படுகிறது. இந்தத் தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாக பேசப்படுகிறது.