நடிகர் விஜய் சேதுபதி மற்றும் தாப்சி நடிக்கும் புது படமான, அன்னபெல் சேதுபதியின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
இந்த படத்தை புகழ்பெற்ற நடிகர் மற்றும் இயக்குனர் ஆர் சுந்தரராஜனின் மகனான தீபக் சுந்தர்ராஜன் இயக்குகிறார். இது ஒரு பேய் படமாக இருக்கும் என்றும் இந்த படத்திற்கு இரண்டாம் மற்றும் மூன்றாம் பகுதியும் வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தப்படத்தில் விஜய்சேதுபதி, தாப்சி மட்டுமல்லாமல் ராதிகா, ஜகபதி பாபு, தேவதர்ஷினி, சுப்பு பஞ்சு, சேத்தன், யோகி பாபு, சுரேகா வாணி மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு கிஷோர் இசையமைக்கிறார். இந்த படம் நேரடியாக ஓடிடியில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.





