நடிகர் சூர்யாவின் தயாரிப்பு நிறுவனமான ‘2டி என்டர்டெயிண்ட்மென்ட்’ பெயரில் மோசடி!

பசங்க 2, 24, சூரரைப்போற்று உள்ளிட்ட வெற்றிப்படங்களை தயாரித்த நடிகர் சூர்யாவின் தயாரிப்பு நிறுவனமான ’2டி என்டர்டெயிண்ட்மென்ட்’ பெயரில் ஒரு சிலர் மோசடி செய்து வருவதாக தயாரிப்பு நிறுவனம் அறிக்கை விடுத்துள்ளது. 2டி என்டர்டெயிண்ட்மென்ட் தயாரிப்பு நிறுவனத்தின் லாகோ உள்ளிட்டவைகளை பயன்படுத்தி, நடிகர்கள் மற்றும் நடிகையர்கள் தேர்வு நடத்தி பணம் பறித்துக்கொண்டிருப்பதாக கிடைத்த தகவலின் படி இந்த அறிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார்.

மேலும் இது குறித்து காவல் துறையில் புகார் கொடுக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் எங்கள் சார்பில் வருவது போல நடிகர்,நடிகைகள் தேர்வுகள் குறித்த இமெயில்,இன்ஸ்டா பதிவுகள் உள்ளிட்ட அதிகாரப்பூர்வமற்ற செயலிகள் மற்றும் பேஜ்களில் வரும் நம்பகத்தன்மையற்ற தகவல்களை நம்பி ஏமாற வேண்டாம் என்றும் சூர்யா தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

சமீப காலமாகவே பிரபலங்களின் பெயரைச்சொல்லி இணையதளங்களில் நடக்கும் மோசடிகள் அதிகமாகி வருகின்றன. நம்பகத்தன்மை இல்லாமல் இன்ஸ்டா உள்ளிட்ட இணையதளங்களில் வரும் விளம்பரங்களை நம்பி பணத்தை இழந்து விடாதீர்கள் என்று சைபர் கிரைம் தமிழக காவல் துறையினர் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.

“ உங்கள் ஆசைகளை இலக்குகளை குறி வைத்து செய்யப்படும் மோசடிகளில் சிக்கி வீடாதீர்கள் அது உங்கள் ஆசைகளையும் இலக்குகளையும் சில சமயங்களில் வெறுக்க செய்து விடும். “

About Author