உடன்பிறப்பே – ஜோதிகா சசிகுமார் நடிக்கும் ஒரு நவீன பாசமலர்!

நடிகர் திலகம் சிவாஜி கணேசனும் நடிகையர் திலகம் சாவித்திரி நடித்த பாசமலர் திரைப்படத்திற்கு இன்றளவும் மிகப்பெரிய வரவேற்பு உள்ளது. அண்ணன் தங்கை என்றால் அந்த படத்தை தான் எடுத்துக்காட்டாக கூறுவார்கள். இந்த வரிசையில் கத்துக்குட்டி திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் சரவணன் தற்போது 2டி என்டர்டெயின்மென்ட் உடன் இணைந்து இயக்கும் திரைப்படம் “உடன்பிறப்பே”.

இந்த திரைப்படத்தில் ஜோதிகா தங்கையாகவும் சசிகுமார் அண்ணனாகவும் நடிக்கிறார்கள். ஜோதிகாவின் ஜோடியாக சமுத்திரகனியும் சசிகுமாருக்கு ஜோடியாக சிஜா ரோஸும் நடிக்கிறார்கள். இந்த திரைப்படத்திற்கு இமான் இசையமைக்க, வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்தப் படத்தைப் பற்றி இயக்குனர் சரவணன் கூறியது “இந்தப் படம் ஒரு நவீன பாசமலர் என்று கதையை கேட்ட அனைவரும் கூறினார்கள். ஜோதிகா மேடம் எனக்கு ஏற்கனவே பழக்கம் என்பதால், அவரும் கதையை கேட்டுவிட்டு இந்த படத்தை தன்னுடைய ஐம்பதாவது படமாக நடிக்க ஒப்புக்கொண்டார். இதில் அவர் தைரியமான ஒரு தஞ்சாவூர் பெண்ணாக நடித்திருக்கிறார்”.

படக்குழுவுக்கு இடம் பொருள் சார்பாக வாழ்த்துக்கள்

About Author