25 கோடி பார்வையாளர்களை கடந்திருக்கும் ’வாத்தி கம்மிங்’ பாடல்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடித்து கடந்த பொங்கலுக்கு வெளியாகி இருந்த மாஸ்டர் திரைப்படம் மிகப்பெரிய ஹிட் அடித்திருந்தது. இந்த நிலையில் தான் அந்த படத்தில் இடம்பெறும் ஒரு பாடலான வாத்தி கம்மிங் பாடல் தொடர்ந்து ட்ரென்டிங்கில் இருந்தது. உலகம் முழுக்க ரீல்ஸ்களில் ட்ரென்ட் அடித்த வாத்தி கம்மிங் பெரிய பெரிய பிரபலங்களையும் ஈர்த்த நிலையில் தற்போது 25 கோடி பார்வையாளர்களை எட்டி இருக்கிறது.

அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்திருக்கும் இந்த பாடல் வெளி வந்ததில் இருந்தே ட்ரென்டிங்கில் இருந்து வந்தது. பொதுவாக இந்த பாடலில் வரும் நடன அசைவுகள் உலகம் முழுக்க இன்ஸ்டா ரீல்ஸ்களில் ட்ரென்ட் ஆக, கிரிக்கெட் வீரர் முதல் பாலிவுட் நடிகர்கள் வரை அனைவரும் அந்த அசைவுகளுக்கு இசைவுகள் கொடுக்க துவங்கி விட்டனர்.

“ இசையில் ஒரு பக்கம் அனிருத் கலக்க நடனத்தில் விஜய் கலக்கிட இன்றும் யூடியூப்பில் இந்த பாடல் கலக்கி வருகிறது “

About Author