தனுஷ் நடிக்கும் மாறன் படத்தில் இணையும் அமீர்!

தனுஷ், சமுத்திரக்கனி, மகேந்திரன், மாளவிகா மோகனன், ஸ்மிருதி வெங்கட் என்று பெரிய பட்டாளங்கள் இணையும் படமான மாறன் படத்தை இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கும் நிலையில் இந்தப்படத்தில் மற்றுமொறு பெரிய பட்டாளம் கை கோர்ப்பதாக தகவல்கள் கசிந்து வந்தன. அது தற்போது உறுதி ஆகி உள்ளது. இயக்குநர் அமீர் அவர்கள் இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக தற்போது படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

மவுனம் பேசியதே படத்தின் மூலம் திரை உலகத்திற்கு இயக்குநராக அறிமுகமான அமீர், பருத்தி வீரன் என்னும் ரசனையான படத்தை கொடுத்து மாபெரும் ஹிட் அடித்து தமிழ் திரைப்பட உலகில் தன் திறமையை இயக்குநராக நிரூபித்து இருந்தார். அதற்கு பின் பல்வேறு படங்களில் நடிகராகவும் வலம் வந்தார். வெற்றிமாறன் படமான வடசென்னை படத்தில் தனுஷ் உடன் இணைந்து நடித்திருந்த அமீர் தற்போது கார்த்திக் நரேன் இயக்கத்தில் மாறன் படத்திலும் தனுஷ் உடன் இணைய இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.

சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். பட வேலைகள் மும்முரமாக நடைபெறும் நிலையில் இப்படம் சீக்கிரமே பெரிய திரையில் ரிலீஸ் ஆகும் என்று படக்குழுவினர் அறிவித்து உள்ளனர்.

“ வடசென்னை படத்தில் கலக்கியிருக்கும் தனுஷ்-அமீர் காம்போ, இந்த மாறன் படத்திலும் வெற்றிக்கூட்டணியாக அமையுமா என்பதை எதிர்பார்த்து காத்திருப்போம் “

About Author