இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 43,263 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று!
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 43,263 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கடந்த ஒரு நாளில் மட்டும் 338 பேர் தொற்றுக்கு பலியாகி உள்ளனர். இதன் மூலம் இந்தியாவில் ஒட்டு மொத்த கொரோனோ பலி எண்ணிக்கை 4,41,749 -ஆக உயர்ந்துள்ளது.
இது போக நேற்றைய ஒரே நாளில் 40,567 பேர் தொற்றிலிருந்து குணமாகி வீடு திரும்பியுள்ளனர். தொற்று எண்ணிக்கையை பொறுத்தவரை நேற்றைய எண்ணிக்கையை விட இன்று சற்று உயர்ந்தே உள்ளது. இருப்பினும் மீட்பு விகிதம் அதை ஈடுகட்டுவதாய் உள்ளது.
நேற்றைய தினம் வரை இந்தியாவில் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களின் எண்ணிக்கை 72 கோடியைக் கடந்துள்ளது. ஒரு நாளுக்கு சராசரியாக 82 லட்சம் பேர் இந்தியாவில் தடுப்பூசி செலுத்திக் கொள்கின்றனர். ஒட்டு மொத்த இந்திய மக்கள் தொகையில் நூற்றுக்கு தலா 52.7 பேர் தடுப்பூசி செலுத்திக்கொள்கின்றனர்.
” ஒரு பக்கம் சராசரியான பாதிப்பு இன்னொரு பக்கம் அதிகரிக்கும் மீட்பு, மற்றுமொரு பக்கம் தடுப்பூசி விழிப்பு விழிப்புணர்வு என்று தேசம் இன்றைய தினம் வரை சரியான போக்கிலேயே சென்று கொண்டிருப்பதாக தோன்றுகிறது. அத்துடன் நம்முடைய கடமையான முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளிகளை பேணுதல் ஆகியவற்றை முறையாக கையாண்டு சமூகத்தை பொறுப்புடன் பாதுகாப்பான வழிதனுக்கு கொண்டு செல்வோம் “