விரைவில் வருகிறது ’சிவக்குமாரின் சபதம்’ ட்ரெயிலர் – படக்குழு

Siva Kumarin Sabadham Trailer Coming Soon

Siva Kumarin Sabadham Trailer Coming Soon

ஹிப்ஹாப் ஆதி நடிக்கும் ‘சிவக்குமாரின் சபதம்’ படத்தில் ட்ரெயிலர் விரைவில் வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில், கதை, திரைக்கதை, வசனம், பாடல், இசையமைப்பாளர், இயக்குநர் மற்றும் கதாநாயகன் என்று பன்முகத்துடன் ஹிப்ஹாப் ஆதி, மதூரி, ஆதித்யா கதிர் மற்றும் வி ஜே பார்வதி என்று பலரும் இணையும் சிவகுமாரின் சபதம் படத்தின் ட்ரெயிலர் விரைவில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

‘ Trailer On The Way ‘ என்று குறிப்பிட்டு இருக்கும் ஒரு போஸ்டரை வெளியிட்டு இந்த அறிவிப்பை வெளியிட்டு இருக்கும் படக்குழு தெளிவான தேதி எதையும் குறிப்பிடவில்லை. விரைவில் என்பது இன்று இந்த நாளாக கூட இருக்கலாம் என்று ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

“ முன்னொரு காலத்தில் கதை, திரைக்கதை, வசனம், பாடல், இசை, இயக்கம் – டி ஆர் ராஜேந்தர் என்று டைட்டில் கார்டு பாத்திருப்போம். தற்போது அந்த பாணியில் ஹிப் ஹாப் ஆதியும் களம் இறங்கி இருக்கிறார் என்பது வரவேற்கத்தக்கதே, படம் எப்படி இருக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் “

About Author