ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் ‘செல்பி’ படத்தின் பர்ஸ்ட் லுக் இணையத்தில் வெளியானது!

Selfie First Look

Selfie First Look

ஜி.வி.பிரகாஷ் மற்றும் கவுதம் மேனன் இணைந்து நடிக்கும் ‘செல்பி’ படத்தில் முதல் பார்வை படக்குழுவினரால் அதிகாரப்பூர்வமாக இணையத்தில் வெளிடப்பட்டுள்ளது.

’வி கிரியேசன்ஸ்’ மற்றும் ‘டி ஜி பிலிம் கம்பெனி’ தயாரிப்பில், மதி மாறன் அவர்களின் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ், கவுதம் மேனன் மற்றும் வர்ஷா பொல்லம்மா இணைந்து நடிக்கும் ‘செல்பி’ படத்தின் முதல் பார்வை இணையத்தில் படக்குழுவினரால் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. இப்படத்தின் இயக்குநர் மதிமாறன், இயக்குநர் வெற்றிமாறன் அவர்களின் உதவியாளராக இருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் இப்படத்தில் ‘வி கிரியேசன்ஸ்’ தயாரிப்பாளர் தாணுவும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இது போக இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷே இசையமப்பாளராகவும் பணிபுரிய இருக்கிறார். மேலும் இப்படத்தில் ஒளிப்பதிவாளராக விஷ்ணு ரங்கசாமியும் எடிட்டராக எஸ் இளையராஜா அவர்களுகும் பணிபுரிய இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.

“ பார்க்கலாம், வெற்றி மாறன் தமிழ்சினிமாவில் புரியும் ஒரு மேஜிக்கை, அவரின் உதவியாளர் மதிமாறனும் செய்வாரா என்று…! “

About Author