அருண் விஜய் நடிக்கும் ‘பார்டர்’ படத்தின் ட்ரெயிலர் இணையத்தில் வெளியானது!

Arun Vijay Borrder Movie Trailer Released In Net

Arun Vijay Borrder Movie Trailer Released In Net

அருண் விஜய் நடிக்கும் ‘பார்டர்’ திரைப்படத்தின் ட்ரெயிலர் படக்குழுவினரால் இணையத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.

’ஆல் இன் பிக்சர்ஸ்’ விஜய் ராகவேந்திரா அவர்களின் தயாரிப்பில், இயக்குநர் அறிவழகன் இயக்கத்தில் அருண் விஜய், ரெஜினா, ஸ்டெபி படேல் மற்றும் பலர் நடிக்கும் ‘பார்டர்’ திரைப்படத்தின் ட்ரெயிலர் நேற்று படக்குழுவினரால் அதிகாரப்பூர்வமாக இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. வெளியிடப்பட்டுள்ள ஒரு நாளிலே 15 லட்சத்திற்கும் அதிகமான பார்வையாளர்களை பெற்றிருக்கிறது பார்டர் திரைப்படத்தின் ட்ரெயிலர்.

ஈரம், வல்லினம், ஆறாது சினம், குற்றம் 23 ஆகிய வெற்றிப்படங்களை இயக்கிய அறிவழகன் ஒரு சில இடைவெளிகளுக்கு பிறகு மீண்டும் அருண் விஜய்யுடன் இணைந்து பார்டர் படத்தில் களம் இறங்கி இருக்கிறார். ராணுவப் புலனாய்வு சம்மந்தப்பட்ட ஒரு அதிரடி படமாக பார்டர் இருக்கும் என்பது ட்ரெயிலரைப் பார்க்கையில் புலப்படுகிறது. பொறுத்திருந்து பார்க்கலாம் அறிவழகன் அவரது ’பார்டர்’ திரைக்களத்தில் என்ன செய்திருக்கிறார் என்று!

“ யானை, சினம், பாக்சர் என்று அருண் விஜய்யின் பிசி ஸ்கெட்யுலில் வர இருக்கும் மற்றுமொறு திரைப்படம் ‘பார்டர்’. கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்கும் ஹீரோக்களின் வரிசையில் தற்போது அருண் விஜய்யும் இணைந்திருப்பதால், பார்டர் திரைப்படம் பெரும் எதிர் பார்ப்பை ரசிகர்களிடையே ஏற்படுத்தி உள்ளது “

About Author