விஜய் ஆன்டனியின் ‘கோடியில் ஒருவன்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Vijay Antony In Kodiyil Oruvan Release Date Announced

Vijay Antony In Kodiyil Oruvan Release Date Announced

விஜய் ஆன்டனியின் ’கோடியில் ஒருவன்’ திரைப்படத்த்தின் வெளியீட்டு தேதியை அறிவித்து இருக்கிறது அப்படத்தின் படக்குழு.

’செந்தூர் பிலிம்ஸ் இன்டர்நேசனல்’ TD ராஜா அவர்களின் தயாரிப்பில், இயக்குநர் ஆனந்த கிருஷ்ணன் அவர்களின் இயக்கத்தில் விஜய் ஆன்டனி, ஆத்மிகா, ராமச்சந்திர ராஜூ மற்றும் பலர் நடிக்கும் ‘கோடியில் ஒருவன்’ திரைப்படம் செப்டம்பர் 17 முதல் உலகமெங்கும் ரிலீஸ் செய்யப்படும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

நான், சலீம், சைத்தான், பிச்சைக்காரன் போன்ற வித்தியாசமான கதாபாத்திரங்களை ஏற்று அதில் அசாதாரணமாய் வெற்றியும் பெற்றிருக்கிறார் விஜய் ஆன்டனி. அவர் தேர்வு செய்யும் கதைக்களத்திற்காகவே தனியாக ஒரு ரசிகர் கூட்டம் அவருக்கு உண்டு. இசையமைப்பாளர் என்ற பின்னனியில் வந்தவர், தன் எதார்த்த நடிப்பில் நடிகராகவும் விஜய் ஆன்டனி நிச்சயமாக ஒரு நல்ல இடத்தை தனக்கென்று தக்க வைத்திருக்கிறார் என்றால் அது மிகையாகாது.

“ நீண்ட நாள்களாகவே ரிலீஸ் வரிசையில் நின்று கொண்டிருந்த ’கோடியில் ஒருவன்’ தற்போது ரிலீஸ்க்கு தயாராகி விட்டது. பொறுத்திருந்து பார்க்கலாம் ஆனந்த கிருஷ்ணனும், விஜய் ஆன்டனியும் இணைந்து இந்த படத்தில் என்ன செய்திருக்கிறார்கள் என்பதை…! “

About Author