ட்விட்டரில் ட்ரெண்டாகும் ‘வலிமை டீசர்’ ஹேஸ்டாக்!

Valimai Teaser Update From Today

Valimai Teaser Update From Today

வலிமை டீசர் குறித்த அறிவிப்பு இன்று வெளியாகும் என்று நம்ப தகுந்த வட்டாரங்கள் தெரிவித்து வரும் நிலையில் ’வலிமை டீசர்’ என்னும் ஹேஸ்டாக் ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது.

போனி கபூர் அவர்களின் தயாரிப்பில், இயக்குநர் வினோத் அவர்களின் இயக்கத்தில், அஜித் குமார், ஹியுமா குரேஷி, யோகி பாபு, புகழ் மற்றும் பலர் நடிக்கும் வலிமை படம் தான் இந்த வருடத்தின் அஜித் ரசிகர்களின் மிகப்பெரிய தவம். ஒவ்வொரு அப்டேட்டுகளையும் ஏதோ பொக்கிஷம் கிடைத்தது போல தொடர்ந்து கொண்டாடி வருகின்றனர்.

சின்ன சின்ன அறிவிப்புகளுக்கே ட்ரெண்ட் என்பதை அஜித் ரசிகர்கள் வாடிக்கையாக கொண்டு இருக்கின்றனர். ஆனால் தற்போது ’வலிமை டீசர்’ எனப்படும் பெரிய அறிவிப்பு ஒன்று, இன்று வெளியாகும் என்று நம்ப தகுந்த ஒரு சில வட்டாரங்கள் தெரிவித்து வரும் நிலையில் உடனே ட்ரெண்ட் ஆக ஆரம்பித்து இருக்கிறது ட்விட்டரில் ‘வலிமை டீசர்’ எனப்படும் ஹேஸ்டாக்.

” எப்போதும் அஜித் மற்றும் அஜித் அவர்களின் படம் குறித்த அப்டேட்டுகள், அஜித் ரசிகர்களை மிகவும் காக்க வைக்கும். இந்த நிலையில் வலிமை டீசர் குறித்த அப்டேட்டுகள் அதிகாரப்பூர்வமில்லாதது என்றாலும் ஏதோ ஒரு நம்பிக்கையில் குஷியில் இருக்கின்றனர் அஜித் ரசிகர்கள் “

About Author