இயக்குநர் பிரபு சாலமனுடன் இணையும் ‘குக் வித் கோமாளி’ புகழ் அஷ்வின்!

’குக் வித் கோமாளி’ மூலம் பெரிதும் கொண்டாடப்பட்ட நடிகர் அஸ்வின் குமார், இயக்குநர் பிரபு சாலமனுடன் ஒரு படத்தில் இணைய இருப்பதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றன. மேலும் படப்பிடிப்புகள் அக்டோபரில் துவங்கும் எனவும் தகவல்கள் தெரிவித்து வருகின்றனர்.

நீண்ட நாட்களாகவே ஒரு சிறந்த வாய்ப்பினை தேடி வந்த அஷ்வின் குமார் அவர்களுக்கு இயக்குநர் பிரபு சாலமன் படத்தில் இணைய வாய்ப்பு கிடைத்திருப்பது அவரின் ரசிகர்களையும் கொண்டாட்டத்தில் தூக்கி வைத்துள்ளது. இந்த அப்டேட்டு வெளியானதுமே ட்விட்டரில் தொடர்ந்து அஷ்வின் குமார் ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறார். அமைதியான மனிதருக்கு ட்விட்டரில் ஆக்ரோசமான ட்ரெண்டுகள்.

“ வாழ்த்துக்கள் அஷ்வின் குமார் அவர்களே, திறமையை நிரூபித்து படத்தை வெற்றிக் களத்திற்கு நிச்சயம் கொண்டு செல்வீர்கள் என்று நம்புகிறோம் “

About Author