சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘டாக்டர்’ திரைப்படம் ரிலீசாகும் தேதி படக்குழுவினரால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இயக்குநர் நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில், சிவகார்த்திகேயன், வினய், பிரியங்கா அருள் மோகன், யோகி பாபு மற்றும் பலர் நடிக்கும் ’டாக்டர்’ திரைப்படம் அக்டோபர் 9 அன்று உலகம் முழுக்க வெளியாகும் என்று படக்குழுவினரால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
“ டாக்டர் , பீஸ்ட் என்று இரண்டு களங்களில் நெல்சன் திலீப் குமார் கலக்கி கொண்டு இருக்கிறார். பார்க்கலாம் படமும் திரையரங்குகளில் வெளியாகி ஒரு கலக்கு கலக்குமா என்று…? “