மீளும் ஐபிஎல்லில் நாளை முதல் போட்டியில் மோதும் சிஎஸ்கே மற்றும் மும்பை!

CSK vs MI IPL 2021 From Tomorrow At UAE

CSK vs MI IPL 2021 From Tomorrow At UAE

கொரோனோ சூழலில் நிறுத்தப்பட்ட ஐபிஎல் நாளை முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் மீளுகிறது. நாளை நடக்கும் முதல் போட்டியில் சிஎஸ்கே அணியும் மும்பை அணியும் மோத உள்ளன. சிஎஸ்கே வெர்சஸ் மும்பை என்றாலே ஒரு இந்தியா-பாகிஸ்தான் மேட்ச் போல ஒரு திரில்லரைக் காண முடியும். அந்த அளவுக்கு எதிர்பார்ப்புகள் இருக்கும்.

ஒரு பக்கம் தோனி மறுபக்கம் ரோஹிட் இரண்டு மாபெரும் பில்லர்கள் மோதிக் கொள்ளும் போட்டி என்பதால் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. இது வரை இரண்டு அணிகளும் நேருக்கு நேர் மோதிய 31 போட்டிகளுள், 19 போட்டிகளில் மும்பையும், 12 போட்டிகளில் சென்னை அணியும் வென்றிருக்கிறது. புள்ளிப்பட்டியலைப் பொறுத்த வரை சென்னை அணி இரண்டாவது இடத்திலும் மும்பை நான்காவது இடத்திலும் இருக்கிறது.

“ பார்க்கலாம் நம்ம தல தோனி தலைமையிலான சென்னை அணியா, மும்பை தல ரோஹிட் தலைமையிலான மும்பை அணியா என்று பார்க்கலாம் “

About Author