இயக்குநர் அட்லியின் பிறந்த தினம் இன்று!

Happy Birthday Atlee 21 09 21

Happy Birthday Atlee 21 09 21

ராஜா ராணி, மெர்சல், தெறி போன்ற வெற்றிப் படங்களை கொடுத்த இயக்குநர் அட்லி அவர்களின் பிறந்த தினம் இன்று!

இயக்குநர் சங்கர் அவர்களிடம் அசிஸ்டண்ட் டைரக்டராக பணிபுரிந்து பின்னர் ‘ராஜா ராணி’ படத்தின் மூலம் தமிழ் திரைப்பட உலகிற்கு டைரக்டராக அறிமுகமானார். அதற்கு பின் தெறி, மெர்சல் என்று நடிகர் விஜய்யுடன் கூட்டணி. இரண்டுமே சினிமா இண்டஸ்ட்ரியில் மெகா ஹிட். இன்று தமிழ் சினிமாவில் ஒரு தவிர்க்க முடியாத டைரக்டராக அட்லி உருவெடுத்திருக்கிறார் என்றால் அது மிகையாகாது.

கமெர்சியல் கதைக்களத்தின் ஹீரோ என்றே அவரைச் சொல்லலாம். பொதுவாகவே அவரின் படத்தில் காதல், எமோசன்ஸ், ஹீரோயிசம் என்று எல்லாம் சரியான விகிதத்தில் இருக்கும். ஒரு குடும்பமாக படத்திற்கு போனால் அனைவரும் மகிழும் வண்ணம் இருக்கும். அதுவே ரசிகர்களாக போய் பார்த்தால் விசில் அடித்துக் கொண்டாடும் அளவிற்கு மினிமம் கியாரண்டி இருக்கும்.

“ அஜித், விஜய், ரஜினி ரசிகர்கள் பெரும்பாலும் தங்களது ஹீரோக்களின் படத்தில் எதிர்பார்ப்பது கை தட்டி விசில் அடிக்கும் அளவிற்கு ஒரு 5 சீன்கள், அப்பேற்பட்ட படத்தைக் கொடுப்பதில் தான் இந்த இயக்குநர் அட்லி வல்லவர் என்றால் அது மிகையாகாது “

About Author