கடந்த 24 மணிநேரத்தில் இந்தியாவில் 31,458 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று!
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 31,458 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் நேற்று ஒரு நாளில் இந்தியாவில் 319 பேர் தொற்றுக்கு பலியாகி உள்ளனர். இதன் மூலம் இந்தியாவில் ஒட்டு மொத்த கொரோனோ தொற்று 4,46,399 ஆக உயர்ந்து இருக்கிறது.
இது போக நேற்றைய தினத்தில் மட்டும் 32,549 பேர் தொற்றில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். மேலும் தடுப்பூசி உபயோகமும் இந்தியாவில் 83 கோடியைக் கடந்துள்ளது. இந்தியாவில் நாள் ஒன்றுக்கு சராசரியாக 80 லட்சத்திற்கும் அதிகமானோர் தடுப்பூசி எடுத்துக்கொள்கின்றனர். மேலும் தேசத்தில் 100 பேருக்கு தலா 62.06 பேர் தடுப்பூசி எடுத்துக்கொள்கின்றனர்.
உலகளாவிய அளவில் நேற்றைய தினத்தில் மட்டும் 5,30,656 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் நேற்று மட்டும் உலகம் முழுக்க தொற்றுக்கு 10,492 பேர் வலியாகி உள்ளனர். இதன் மூலம் ஒட்டு மொத்த உலகளாவிய கொரோனோ பலி 47,28,410 ஆக உயர்ந்து இருக்கிறது.
“ கொரோனோ என்னும் சூழல் இன்னமும் இந்த தேசத்தை விட்டு நீங்கவில்லை, ஆதலால் தொடர்ந்து முகக்கவசம் அணியுங்கள். கொரோனோ கட்டுப்பாடுகளை முறையாக கையாளுங்கள் “