ஐபிஎல் 2021 | இன்றைய போட்டியில் சென்னை அணி பெங்களுரு அணியை எதிர் கொள்ள இருக்கிறது!

CSK VS RCB 35 th Match Of IPL 2021 Starts Today

CSK VS RCB 35 th Match Of IPL 2021 Starts Today

ஐபிஎல் 2021-இன் 35 ஆவது போட்டியில் மகேந்திர சிங் தலைமையிலான சென்னை அணியானது, விராட் கோலி தலைமையிலான பெங்களுரு அணியை எதிர்கொள்ள இருக்கிறது. பரபரப்பான இந்த போட்டி ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் இந்திய நேரப்படி 7:30 மணி அளவில் தொடங்க இருக்கிறது.

ஒரு பக்கம் மும்பையுடனான வெற்றித் திருமுகத்துடன் களம் இறங்கும் தோனி, இன்னொரு பக்கம் கொல்கத்தாவுடனான அதிர்ச்சி தோல்வியோடு, ப்ரஷ்சருடன் களம் இறங்கும் கோஹ்லி, நிச்சயம் இந்த ஆட்டத்தில் கடைசி வரைக்கும் இரு அணிகளிடமும் ஒரு வெறிதனை எதிர்பார்க்கலாம். அதாவது களம் கடைசி வரை நிச்சயம் சூடாகவே இருக்கும்.

இதுவரை 26 போட்டிகளில் சென்னையும் பெங்களுருவும் நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. அதில் 17-இல் சென்னையும், 9 போட்டிகளில் பெங்களுரு அணியும் வென்றிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. தொடர் வெற்றியை தக்க வைத்துக் கொள்ள சென்னை அணியும், தோல்வியில் இருந்து மீள பெங்களுரு அணியும் போராட, இன்றைய களம் எப்படியும் அனல் சூழ்ந்தே இருக்கும்.

Royal Challengers Bangalore Probable XI: Virat Kohli (c), Devdutt Padikkal, KS Bharat (wk), Glenn Maxwell, AB de Villiers, Tim David/Wanindu Hasaranga, Kyle Jamieson, Harshal Patel, Mohammed Siraj, Yuzvendra Chahal, Navdeep Saini

Chennai Super Kings Probable XI: Faf du Plessis, Ruturaj Gaikwad, Moeen Ali, Suresh Raina, Ambati Rayudu/Uthappa, Ravindra Jadeja, MS Dhoni (c&wk), Dwayne Bravo/Sam Curran, Shardul Thakur, Deepak Chahar, Josh Hazlewood

” தோனி வெர்சஸ் கோஹ்லி, குரு வெர்சஸ் சிஷ்யன், பார்க்கலாம் யார் வெல்கிறார்கள் என்று பொறுத்திருந்து பார்க்கலாம் “

About Author