ஐபிஎல் 2021 | ராஜஸ்தானை வென்றது ஹைதராபாத் அணி!

Jason Roy 60 Runs Fiery Innings Against RR

Jason Roy 60 Runs Fiery Innings Against RR

ஐபிஎல் 2021-இன் 40 ஆவது போட்டியில் ராஜஸ்தான் ராயல்சை வென்றது, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி.

முதலில் ஆடிய ராஜஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 164 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக சஞ்சு சாம்சன் 57 பந்துகளில் 82 ரன்கள் எடுத்தார். இதில் 7 போர்கள்,3 சிக்ஸ்கள் அடங்கும். அதற்கு பின் ஆடிய சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணி 18.3 ஓவர்களில் இலக்கை எட்டிப்பிடித்தது.

அதிகபட்சமாக ஜேசன் ராய் 42 பந்துகளில், 8 போர்கள், 1 சிக்ஸ் உட்பட 60 ரன்கள் எடுத்து ஹைதராபாத் அணியின் வெற்றிக்கு வித்திட்டார். கேப்டன் கேன் வில்லியம்சனும் தனது பங்கிற்கு 41 பந்துகளில் 51 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் நின்றார்.

“ சஞ்சு சாம்சன் ஒரு பேட்ஸ்மேனாக இந்த போட்டியில் ஸ்கோர் செய்த போதும், ஒரு கேப்டனாக, பவுலரை குறிப்பிட்ட கட்டத்தில் தேர்வு செய்வதில் பெரிதாய் சொதப்புகிறார். இதுவே இந்த போட்டியின் தோல்விக்கு பெரிதும் காரணமாய் அமைந்தது “

About Author