அஸ்வின் குமார் நடிக்கும்‘என்ன சொல்ல போகிறாய்’ பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது!

Enna Solla Pogirai First Single Of Aswin Kumar Movie Released In Net

Enna Solla Pogirai First Single Of Aswin Kumar Movie Released In Net

’குக் வித் கோமாளி’ புகழ் அஸ்வின் குமார் நடிக்கும் ‘என்ன சொல்ல போகிறாய்’ படத்தின் ‘ஆசை’ எனப்படும் பர்ஸ்ட் சிங்கிள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

’ட்ரைடன்ட் ஆர்ட்ஸ்’ தயாரிப்பில், இயக்குநர் ஹரிகரன் அவர்களின் இயக்கத்தில், ’குக் வித் கோமாளி’ புகழ் அஸ்வின் குமார், தேஜு அஸ்வினி, அவந்திகா மிஸ்ரா, விஜய் டிவி புகழ் மற்றும் பலர் நடிக்கும் ‘என்ன சொல்ல போகிறாய்’ படத்தின் ‘ஆசை’ எனப்படும் பர்ஸ்ட் சிங்கிள் இணையத்தில் இன்று வெளியாகி உள்ளது. மேலும் ’ஆசை’ பர்ஸ்ட் சிங்கிளின் விடீயோ பதிவு இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என்றும் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

” முன்னெல்லாம் கோலிவுட் ட்ரென்டிங் என்றால் ரஜினி, கமல், அஜித், விஜய் என்ற நால்வரை சுற்றியே இருக்கும். இப்போதெல்லாம் வளர்ந்து வரும் நடிகர்களுக்கும், ரசிகர்கள் கொடுக்கும் முக்கியத்துவம், அவர்களையும் ட்ரென்டிங்கில் ஏற்றி வைத்து அழகு பார்ப்பதிலேயே தெரிகிறது, நேற்றைய ட்ரென்டிங் கவின், இன்றைய ட்ரென்டிங் அஸ்வின்“

About Author