மாரி செல்வராஜ் – உதயநிதி படத்தில் இணையும் பகத் பாசில்!

Fahad Fazil Joining In Mari Selvaraj Udhaya Nidhi Film

Fahad Fazil Joining In Mari Selvaraj Udhaya Nidhi Film

அடுத்ததாக மாரி செல்வராஜ் அவர்கள் இயக்கும் படத்திற்கு உதயநிதி கதாநாயகனாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அந்தப் படத்தில் பகத் பாசில் அவர்களும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.

பரியேறும் பெருமாள், கர்ணன் என்று இரண்டு மிகப்பெரும் ஹிட் அடித்த மாரி செல்வராஜ், தனது அடுத்த படத்தில் உதயநிதியுடன் கைகோர்ப்பதாக தகவல்கள் வந்து கொண்டு இருந்தன. இந்த நிலையில் அந்த படத்தில் பகத் பாசில் அவர்கள் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.

” பெயரிடப்படாத இந்த படத்திற்கு பிறகு உதயநிதி நடிப்பதை நிறுத்தப்போவதாக திரை வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றன. மாரி செல்வராஜ் இந்த படத்திற்கு பிறகு துருவ் விக்ரம் படத்தில் இணைவதாக கூடுதல் தகவல் “

About Author