கடைசியாக திருமண முறிவை ஒத்துக் கொண்ட சமந்தா – நாகசைதன்யா ஜோடி!
நீண்ட நாட்களாகவே வதந்தி என கூறப்பட்டு வந்த சமந்தா – நாகசைதன்யா முறிவு தற்போது உண்மையாகி உள்ளது.
பல்வேறு பத்திரிக்கை நிறுவனங்கள் சில நாட்களாகவே சமந்தா – நாகசைதன்யா உறவு முறிந்து விட்டதாக கிசு கிசுத்து வந்த நிலையில், தற்போது சமந்தா தனது சார்பில் அதை ஒத்துக்கொண்டு ஒரு உணர்ச்சி பூர்வமான பதிவினை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். இதன் மூலம் இருவரும் அதிகாரப்பூர்வமாக பிரிய இருப்பது தெரிய வருகிறது.
“ தினமும் ஒரு செய்தி சமந்தா – நாகசைதன்யா பிரிவைக்குறித்து இணையத்தில் வந்து கொண்டிருந்த நிலையில், அதை உண்மை என ஒப்புக் கொண்டு முதன் முறையாக அந்த செய்திகளுக்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைத்து இருக்கிறார் சமந்தா “