ஐபிஎல் 2021 | இன்றைய போட்டியில் ஹைதராபாத்தை எதிர்கொள்கிறது பெங்களுரு அணி!

RCB VS SRH IPL 2021 52th Match Starts Today

RCB VS SRH IPL 2021 52th Match Starts Today

ஐபிஎல் 2021-இன் 52 ஆவது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தை எதிர்கொள்கிறது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு அணி.

இன்றைய போட்டியில் விராட் கோலி தலைமையிலான பெங்களுரு அணி, கேன் வில்லியம்சன் தலைமையிலான ஹைதராபாத் அணியை எதிர் கொள்ள இருக்கிறது. அபுதாபி மைதானத்தில் வைத்து நடைபெறும் இந்த போட்டியானது சரியாக இந்திய நேரப்படி 7:30 மணிக்கு நேரலையில் ஒளிபரப்பாகும்.

ஏற்கனவே கிட்ட தட்ட வெளியேறியுள்ள ஹைதராபாத் அணி எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல் ஆடும். இரண்டாவது இடத்திற்குள் நுழையும் முனைப்பில் பெங்களுரு ஆடும். ரசிகர்களும் எதையும் எதிர்பார்க்காமல் தான் இந்த மேட்சை காண நேரிடும். ’ஏன்னா எதிர்த்து ஆடுறவன் பேரு ஹைதராபாத் அணிம்மா’ என்ற மயில்சாமியின் வாய்ஸ் தான் ஒவ்வொரு முறையும் ஹைதராபாத் ஆடும் போதெல்லாம் மனதில் தோன்றுகிறது.

Royal Challengers Bangalore Probable XI: Virat Kohli (c), Devdutt Padikkal, Srikar Bharat (wk), Glenn Maxwell, AB de Villiers, Daniel Christian, Shahbaz Ahmed, George Garton, Harshal Patel, Yuzvendra Chahal and Mohammed Siraj.

Sunrisers Hyderabad Probable XI: Jason Roy, W Saha (wk), Kane Williamson (c), Priyam Garg, Abhishek Sharma, Abdul Samad, Jason Holder, Rashid Khan, Bhuvneshwar Kumar, Sandeep Sharma/S Kaul, Umran Malik

” விளையாடும் கடைசி இரண்டு போட்டியில் ஆவது கொஞ்சம் விறுவிறுப்புடன் விளையாடிவிட்டு ஹைதராபாத் விடைபெற்றால் நன்றாக இருக்கும் “

About Author