ஐபிஎல் 2021 | இன்றைய முதல் போட்டியில் பஞ்சாப் அணியை எதிர் கொள்கிறது சென்னை அணி!

IPL 2021 53th Match PBKS VS CSK Starts Today

IPL 2021 53th Match PBKS VS CSK Starts Today

ஐபிஎல் 2021-இன் 53 ஆவது போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்கொள்ள இருக்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

இன்று நடக்கும் முதல் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை அணி, கே.எல்.ராகுல் தலைமையிலான பஞ்சாப் அணியை எதிர்கொள்கிறது. துபாய் சர்வதேச மைதானத்தில் வைத்து நடைபெறும் இந்த போட்டியானது, சரியாக இந்திய நேரப்படி 3:30 மணியளவில் நேரலையாக ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் ஒளிபரப்பாகும்.

தொடக்க ஆட்டக்காரர்கள் சொதப்பினால், வரிசையாக சொதப்புகிறது சென்னை அணி. அதை இந்த ஆட்டத்தில் சரி செய்து வெற்றியும் பெற்று முதல் இடத்திற்கு மீண்டும் அரியணை ஏறுகிறதா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். பஞ்சாப் அணியை பொறுத்தவரை இது ஒரு ஆறுதல் கேம். வந்தால் என்ன போனால் என்ன என்று விளையாடக்கூடிய வாய்ப்பு. பயன்படுத்திக் கொள்கிறார்களா என்பதை பார்ப்போம்.

இதுவரை இரண்டு அணிகளும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட 24 போட்டிகளில், 15இல் சென்னை அணியே வென்று முன்னிலை வகிக்கிறது. இருந்தாலும் இதுவரை மோசமாக ஆடி ஐபிஎல் முடியும் கடைசிக் கட்டத்தில் நேற்றி பொங்கி எழுந்த ஹைதராபாத் அணியை போல, இன்று பஞ்சாப் அணியும் விஸ்வரூபம் எடுக்கலாம். அதனால் சென்னை அணி பொறுப்புடன் விளையாட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.

Chennai Super Kings Probable XI: Ruturaj Gaikwad, Faf du Plessis, Robin Uthappa/Suresh Raina, Moeen Ali, Ambati Rayudu, Ravindra Jadeja, Dwayne Bravo, MS Dhoni, Deepak Chahar, Shardul Thakur, Josh Hazlewood

Punjab Kings Probable XI: KL Rahul, Mayank Agarwal, Nicholas Pooran, Aiden Markram, Deepak Hooda, Shahrukh Khan, Moises Henriques, Harpreet Brar, Mohammed Shami, Ravi Bishnoi, Arshdeep Singh

” சென்னை அணி முதல் இடம் என்னும் கீரிடத்திற்காக விளையாடப்போகிறது. பஞ்சாப் எந்த வித ப்ரஸ்சரும் இல்லாமல் களம் இறங்க போகிறது. ஆக மொத்தம் இன்றைய களம் அமர்க்களம் தான் “

About Author