ஐபிஎல் 2021 | இன்றைய இரண்டாவது போட்டியில் ராஜஸ்தான் அணியை எதிர்கொள்கிறது கொல்கத்தா!
ஐபிஎல் 2021-இன் 54 ஆவது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொள்ள இருக்கிறது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி.
இன்றைய இரண்டாவது போட்டியில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் அணி, மார்கன் தலைமையிலான கொல்கத்தா அணியை எதிர்கொள்கிறது. ஷார்ஜா மைதானத்தில் வைத்து நடைபெறும் இந்த போட்டியானது, சரியாக இந்திய நேரப்படி 7:30 மணிக்கு ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் நேரலையில் ஒளிபரப்பாகும்.
ப்ளே ஆப்-யிற்கு தகுதி பெற வேண்டுமெனில் வென்றே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது கொல்கத்தா அணி. ராஜஸ்தானுக்கு இது ஒரு ஆறுதல் கேம் தான். இருந்தாலும் சென்னையுடன் விளையாடியது போல ராஜஸ்தான் அதிரடி காட்டினால், கொல்கத்தாவின் ப்ளே ஆப் சான்ஸ் நிலை குலைந்து போகும்.
இதுவரௌ நேருக்கு நேர் இரு அணிகளும் மோதிய 23 போட்டிகளில் கொல்கத்தா 12 போட்டிகளில் வென்று முன்னிலை வகிக்கிறது. பெரிய வித்தியாசம் ஏதும் இல்லை என்றாலும் கொல்கத்தாவும் தற்போது நல்ல பார்மில் இருப்பதால் இந்த போட்டியில் விறு விறுப்பிற்கு பஞ்சம் இருக்காது.
Kolkata Knight Riders Probable XI: Shubman Gill, Venkatesh Iyer, Rahul Tripathi, Nitish Rana, Eoin Morgan(c), Shakib Al Hasan/Andre Russell, Dinesh Karthik(w), Sunil Narine, Shivam Mavi, Tim Southee, Varun Chakaravarthy
Rajasthan Royals Probable XI: Evin Lewis, Yashasvi Jaiswal, Sanju Samson(w/c), Shivam Dube, Glenn Phillips, David Miller/Liam Livingstone, Rahul Tewatia, Shreyas Gopal, Kuldip Yadav, Mustafizur Rahman, Chetan Sakariya
“ கொல்கத்தா வென்றால், மும்பைக்கு ப்ளே ஆப் சான்ஸ் மிக மிக கம்மியாகி விடும். ராஜஸ்தான் வென்றால் கொல்கத்தாவின் ப்ளே ஆப் சான்ஸ் தூள் தூளாகி விடும். பொறுத்திருந்து பார்க்கலாம் என்ன நடக்கிறது என்று “