ஐபிஎல் 2021 | அதிகாரப்பூர்வமாக ப்ளே ஆப் சான்சில் இருந்து வெளியேறிய மும்பை அணி!

Ishan Kishan Fiery Innings Against SRH

Ishan Kishan Fiery Innings Against SRH

பலம் வாய்ந்த அணி, கடப்பாற பேட்டிங் லைன் அப் என்றெல்லாம் வர்ணிக்கப்படும் மும்பை அணி ஐபிஎல் 2021-யில் ப்ளே ஆப்-யிற்கு கூட தகுதி பெறாமல் வெளியேறி இருக்கிறது.

இன்றைய ஹைதராபாத்திற்கு எதிரான ஆட்டத்தில் மும்பை அதிரடி காட்டிய போதும் கூட, நெட் ரன் ரேட் விகிதத்தின் விளைவாக ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறாமல் வெளியேறி இருக்கிறது சாம்பியன் அணியாக கருதப்படும் மும்பை அணி. இன்றைக்கு மும்பை காட்டியிருந்த அக்ரசிவ் தான் இதற்கு முந்தைய போட்டிகளில் மிஸ்சிங்.

அதுவே மும்பையின் தோல்விக்கு பெரிதாய் காரணமாய் அமைந்தது. இஷான் கிஷன் 84(32), சூர்யகுமார் யாதவ் 82(40) இந்த அதிரடியை இவர்கள் கொஞ்சம் முன்னதாகவே காட்டி இருந்தால் இந்த வெளியேறும் நிலை மும்பைக்கு வந்திருக்காது. எப்போதுமே புள்ளி பட்டியலில் ஆதிக்கம் செலுத்தும் மும்பையால் இந்த வருடம் எதிலும் ஆதிக்கம் செலுத்த முடியவில்லை.

“ 2022 ஐபிஎல்-லில் மீண்டு(ம்) மும்பை இந்தியன்ஸ் பழைய பார்மோடு வரும், அது ஒன்றே மும்பை அணியின் மீது அதன் ரசிகர்கள் வைத்திடும் ஆத்ம நம்பிக்கை “

About Author