ப்ளுசட்டை மாறனின் ‘ஆன்டி இந்தியன்’ படத்தின் ட்ரெயிலர் வெளியாகி உள்ளது!

ப்ளுசட்டை மாறன் இயக்கி நடிக்கும் ‘ஆன்டி இந்தியன்’ திரைப்படத்தின் ட்ரெயிலர் இணையத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியாகி உள்ளது.

கதை, திரைக்கதை, வசனம், இசை, இயக்கம் என்று அனைத்து பொறுப்பையும் ஏற்றுக்கொண்டு அதே படத்தில் நடிகராவும் நடித்து, ’ஆன்டி இந்தியன்’ என்னும் படத்தை எடுத்துள்ளார் நமது தமிழ் டால்க்கீஸ் ரிவ்யூவர் ப்ளுசட்டை மாறன். பல்வேறு இன்னல்களுக்கு பிறகு படத்தின் ட்ரெயிலர் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. படத்தில் ப்ளுசர்ட் மாறன் தவிர்த்து, ராதா ரவி, ஆடுகளம் நரேன், முத்து ராமன் உள்ளிட்டோரும் நடித்துள்ளதாக கூறப்படுகிறது.

“ இது வரை எத்தனையோ படங்களுக்கு காரசாரமான ரிவ்யூ சொல்லி இருப்பார் மாறன் அவர்கள். அவர் படம் வெளியாகும் போது, அவரே அந்த படத்திற்கு ரிவ்யூ செய்வாரா? என்பதே ப்ளுசட்டை மாறன் ரசிகர்கள் பலரின் கேள்வியாக இருக்கிறது. அப்படி பண்ணுவாரேயானால் அவரின் இந்த ’ஆன்டி இந்தியன்’ படத்தை விட, அவரின் படத்திற்கு அவரே செய்யும் ரிவ்யூவிற்கு தான் பலரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருப்பர் “

About Author