ஐபிஎல் 2021 | Qualifier 2 | டெல்லியை தோற்கடித்து பைனலுக்குள் நுழைந்த கொல்கத்தா!
ஐபிஎல் 2021-இன் Qualifier 2 போட்டியில் டெல்லி அணியை அதிரடியாக தோற்கடித்து பைனலுக்குள் த்ரிலிங்காக நுழைந்திருக்கிறது கொல்கத்தா அணி.
முதலில் ஆடிய டெல்லி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 135 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக டெல்லி சார்பில் தவான் 36(39) ரன்கள் எடுத்திருந்தார். கொல்கத்தா சார்பில் வருண் 2 முக்கியமான விக்கெட்டுக்களை கைப்பற்றினார். அதற்கு பின் ஆடிய கொல்கத்தா அணி அதிரடி, சொதப்பல், திரில்லிங் என எல்லாம் கலந்து ஒரு மாஸ் வெற்றியை ருசித்தது.
கொல்கத்தாவின் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய வெங்கடேஷ் ஐயர் 55(41), கில் 46(46) ரன்கள் எடுத்து கொல்கத்தாவின் வெற்றிக்கு துணை புரிந்தனர். முக்கியமாக இந்த போட்டியில் கொல்கத்தா தரப்பில் பந்து வீசிய அத்தனை பவுலர்களும், பவுலிங் எகனாமியை 7-க்குள் வைத்திருந்தனர். அவர்களின் தரமான பந்து வீச்சே, டெல்லி அணியின் சரிவுக்கும் கொல்கத்தாவின் எழுச்சிக்கும் மிகப்பெரிய காரணமாய் அமைந்தது. இந்த வெற்றியின் மூலம் கொல்கத்தா பைனலுக்கு முன்னேறி உள்ளது. பைனலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொள்ள தயாராகி இருக்கிறது கொல்கத்தா.
“ ஐபிஎல்-லின் முதல் பாதியில் பெரிதும் பின் தங்கி இருந்த கொல்கத்தா அணி, இரண்டாவது பாதியில் விஸ்வ ரூபம் எடுத்து தற்போது பைனலுக்குள்ளும் நுழைந்திருக்கிறது. தற்போது ‘நான் வர்ரேண்டா’ என்ற பாணியில் கொல்கத்தா அணியும், ‘ஐயம் வெயிட்டிங்’ என்ற துணிவில் சென்னை அணியும் காத்துக் கொண்டி இருக்கிறது. தோனியா, மார்கனா யார் ‘மாஸ்டர்’ என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம் “