இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 14,289 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று!

Corono Updates In India 18 10 2021

Corono Updates In India 18 10 2021

கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 14,289 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் இந்தியாவில் 165 பேர் கொரோனோ தொற்றுக்கு பலியாகி உள்ளனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனோ பலியானது தேசத்தில் 4,52,321 ஆக உயர்ந்து இருக்கிறது.

இது போக நேற்றைய தினத்தில் மட்டும் இந்தியாவில் 19,578 பேர் தொற்றில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். தடுப்பூசி உபயோகமும் இந்தியாவில் 100 கோடியை நெருங்கி வருகிறது. தேசத்தில் 100 பேருக்கு தலா 73 பேர் குறைந்த பட்சம் ஒரு தவணையாவது தடுப்பூசி எடுத்துக் கொள்கின்றனர்.

“ தேசம் முழுக்க குறைந்து வரும் புதிய தொற்றும், குறைந்து வரும் உயிரிழப்புகளும் நேர்மறையான நிலை என்றாலும் கூட பண்டிகைகள் வரிசையாக வர இருப்பதால் ஆங்காங்கே மக்கள் கூடுவது அதிகரித்துள்ளது. இந்த நிலை மீண்டும் தொற்றினை கூட்டி விடுமோ என்னும் அச்சம் மீண்டும் தேசத்தில் நிலவி வருகிறது “

About Author