T20 World Cup 2021 | புலிக்குட்டிகளை மிரள வைத்த ஸ்காட்லாந்து அணி!

Scotland Win Against Bangladesh T20 World Cup 2021

Scotland Win Against Bangladesh T20 World Cup 2021

டி20 உலககோப்பை 2021-இன் குரூப் B பிரிவின் இரண்டாவது போட்டியில் பங்களாதேஷ் அணியை வென்றிருக்கிறது ஸ்காட்லாந்து அணி.

முதலில் ஆடிய ஸ்காட்லாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 140 ரன்களை எடுத்தது. ஸ்காட்லாந்து சார்பில் கிறிஸ் கிரீவ்ஸ் 28 பந்துகளில் 45 ரன்கள் எடுத்து அதிரடி காட்டினார். அதற்கு பின் ஆடிய பங்களாதேஷ் அணி 20 ஓவர்களின் முடிவில் வெறும் 134 ரன்கள் மட்டுமே எடுத்து 7 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.

புலிக்குட்டிகளின் பந்து வீச்சை புரட்டி போட்டு அடித்த கிறிஸ் கிரீவ்ஸ் அமேசான் டெலிவரி நிறுவனத்தில் டிரைவராக பணிபுரிந்தவராம். கடந்த இரண்டு மாதங்களாக மட்டுமே முறையாக பயிற்சி பெற்று அணிக்குள் வந்திருக்கிறாராம். எது எதுவோ இன்றைய ஸ்காட்லாந்தின் வெற்றிக்கு கிரீவ்ஸ்சின் பங்கு மகத்தானது.

“ தன் அதிரடியில் கிரீவ்ஸ் இன்னும் பல அணிகளை பார்சல் செய்வாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம் “

About Author