T20 World Cup | வார்ம் அப் போட்டியிலேயே இங்கிலாந்தை பொளந்து கட்டிய இந்தியா!

KL Rahul Classy Innings Against England T20 World Cup Warm Up Match

KL Rahul Classy Innings Against England T20 World Cup Warm Up Match

டி20 உலககோப்பை வார்ம் அப் போட்டியில் இங்கிலாந்துக்கு எதிரான தனது முதல் ஆட்டத்திலேயே அதிரடியாக வென்றது இந்திய அணி.

முதலில் ஆடிய இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 188 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக இங்கிலாந்து சார்பில் பேர்ஸ்டோ 49(36) ரன்கள் எடுத்தார். அதற்கு பின் ஆடிய இந்திய அணி, தொடக்கம் முதலே அதிரடி காட்டி இங்கிலாந்து அணியை எளிதாக வென்று உலக கோப்பையில் தனது வெற்றியை தொடங்கி இருக்கிறது.

இந்திய அணி சார்பில் இஷான் கிஷன் 46 பந்துகளில் 70 ரன்கள் அதிரடியாக எடுத்தார். கே எல் ராகுலும் தனது பங்கிற்கு 24 பந்துகளில் 51 ரன்கள் எடுத்தார். இவர்கள் இருவரின் அதிரடியே இந்திய அணியை எளிதாக இலக்கை நோக்கி செல்ல வைத்தது.

“ இஷான் கிஷன் ஐபிஎல்-லில் தனது கடைசி ஆட்டத்தில் ஆடிய அதிரடியை இங்கும் வந்து தொடர்ந்து இருக்கிறார். சூர்ய குமார் யாதவ் அங்கு ஐபிஎல்-லில் சொதப்பியது போலவே இங்கும் சொதப்பி இருக்கிறார். பார்க்கலாம் இன்னும் ஒரு வார்ம் அப் போட்டியில் யார் ஜொலிக்கிறார் என்பதை பொறுத்து பிளேயிங் 11 தெரிந்து விடும் “

About Author